பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்: உயரம் தாண்டுதலில் அசத்திய நிஷாத் குமார்
டோக்கியோ, ஆக.29-
பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் வென்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (டி47) போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். நிஷாத் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டினார்.
அமெரிக்க வீரர் டவுன்சென்ட் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் வைஸ் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ராம் பால் 1.94 மீட்டர் உயரம் தாண்டி 5-வது இடம் பிடித்தார்.
டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“டோக்கியோவிலிருந்து மேலும் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது! ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. தலைசிறந்த திறமை மற்றும் உறுதித் தன்மையுடன் பாராட்டத்தக்க தடகள வீரராக அவர் திகழ்கிறார். அவருக்கு வாழ்த்துகள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
Congratulations, Nishad Kumar! 🎉
— Paralympic Games (@Paralympics) August 29, 2021
The #IND @ParaAthletics star takes #silver in the Men's High Jump - T 47 with a jump of 2.06 metres 🙌#ParaAthletics #Tokyo2020 #Paralympics pic.twitter.com/XvsiWYnBAK
What a day for India at #Paralympics today.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) August 29, 2021
3 medals till now in a day!#BhavinaPatel & #NishadKumar bags silver and #VinodKumar brings bronze.
Congratulations India!
Salute to you 3 champs!
India is Inspired!#Ind #Silver #Bronze #TableTennis #HighJump #discusThrow #tokyo2020 pic.twitter.com/yDxu0Y9uBh
More joyful news comes from Tokyo! Absolutely delighted that Nishad Kumar wins the Silver medal in Men’s High Jump T47. He is a remarkable athlete with outstanding skills and tenacity. Congratulations to him. #Paralympics
— Narendra Modi (@narendramodi) August 29, 2021
It's raining medals for India at #Tokyo2020 #Paralympics on #NationalSportsDay. My hearty congratulations to @nishad_hj and Vinod Kumar for winning Silver and Bronze Medals in #HighJump T47 and #DiscusThrow F52, respectively, with Asian record. #Praise4Para pic.twitter.com/3NWDkZQTIf
— M.K.Stalin (@mkstalin) August 29, 2021
Another #Silver for India on National Sports Day.
— Rahul Gandhi (@RahulGandhi) August 29, 2021
Congratulations to Nishad Kumar for the stellar performance. You’ve done our country proud. #TokyoParalympics pic.twitter.com/byO6vm28KI



No comments
Thank you for your comments