பிஆர்ஓவை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஆக.9
திருப்பூரில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருப்பூர் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசுவதும் அரசு சலுகைகளை பத்திரிக்கையாளர்களுக்கு தர மறுப்பதாகவும் பத்திரிக்கையாளர்களை அரசு சலுகைகள் உடைய பஸ் பாஸ் டூவீலர் ஸ்டிக்கர் எதுவும் தராமல் இழுத்தடித்து வருவதால் மற்றும் ஜாதியின் அடிப்படையில் வேறுபடுத்தி பார்ப்பதால் ஏ.பி.ஆர்.ஓ., சதீஷ்குமார் கண்டித்து திருப்பூர் தின இதழ் மற்றும் வார இதழ் மற்றும் மாத இதழில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களுடைய எதிர்ப்பை தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
No comments
Thank you for your comments