Breaking News

மீண்டும் வூகானில் தலை தூக்கும் கொரோனா..!

 வூகான்:

ஓராண்டுக்கும் அதிகமான இடைவேளைக்குப் பிறகு சீனாவின் வூகான் நகரில் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதால் அதிர்ச்சி அடைந்துள்ள சுகாதார அதிகாரிகள், அங்குள்ள மக்கள் அனைவருக்கும் சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கொரோனாவின் ஊற்றுக்கண் என வர்ணிக்கப்படும் ஊகானில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு திங்கள்கிழமை அன்று புலம் பெயர் தொழிலாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஊகானின் அனைத்து மக்களுக்கும் கொரோனா இருக்கிறதா என்பதை அறிய முழுமையான நியூக்ளிக் ஆசிட் சோதனை செய்யும் பணி துவங்கி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதனிடையே சீனாவில் டெல்டா மரபணு மாற்ற வைரஸ் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 12க்கும் மேற்பட்ட நகரங்களில் மக்களை வீடுகளுக்குள் முடங்குமாறு உத்தரவிட்டுள்ள அரசு, உள்நாட்டு போக்குவரத்தையும் முடக்கி உள்ளது.


No comments

Thank you for your comments