இன்று மகனுக்கு பெயர் வைத்த நடிகர் சிவகார்த்திகேயன் ... என்ன பெயர்... யார் பெயர்... கெஸ் பண்ணூங்க
சென்னை, ஆக.3-
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்று தந்தையின் பெயரை இன்று வைத்துள்ளார். மேலும், வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரைத்துறையைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற 7 வயது மகள் உள்ளார்
இந்நிலை யில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு கடந்த மாதம் ஜூலை 12ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்ததாவது, 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார். என் மகனாக என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்று அவரது தந்தையின் பெயரை வைத்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளததில் பதிவிட்டதாவது, எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்.
Heartfelt thanks to each & everyone for showering ur wishes on our little boy..With all ur blessings & love we hv named our son “GUGAN DOSS”
இவ்வாறு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும்
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 3, 2021
“குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்🙏😊
Heartfelt thanks to each & everyone for showering ur wishes on our little boy..With all ur blessings & love we hv named our son “GUGAN DOSS" 🙏😊 pic.twitter.com/MKbpiWHe2D

No comments
Thank you for your comments