Breaking News

காட்பாடியில் கொரோனா விழிப்புணர்வு!

வேலூர், ஆக.3-

காட்பாடி 1வது மண்டலத்தில் கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது.


வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியான காட்பாடி 1-வது மண்டலம் 12-வது வார்டு காந்தி நகர் டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரவலை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார். 

பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கை, கால்களை சுத்தமாக வைத்து கொள்வது எப்படி என பொதுமக்களிடம் செயல் விளக்கமாக செய்து காண்பித்து விழிப்புணர்வு எற்ப்படுத்தினார். கைகளை முழங்கை வரையிலும் கால்களை முட்டிக்கு கீழேயும் முழுவதுமாக சோப்பு போட்டு தூய்மையான நீரில் கழுவ வேண்டும் என்று விளக்கம் அளித்தனர். பொதுமக்கள் இந்த  செயல்விளக்கத்தை பார்த்து தாங்களும் கற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழச்சியில்  சுகாதார மேற்பார்வையாளர் கே.டேவிட் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

*****

வேலூர் மாநகராட்சி காட்பாடி பகுதியில் மண்டலம் 1ல் ஈரக்கழிவுகளை தனியாக லாரிகளில் சேகரிக்க ஏதுவாக பிளாஸ்டிக் டிரம்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கழிவுகளை பலமுறை பிரித்தாள வேண்டி கையாள வேண்டிய பணி தவிர்க்கப்படுகிறது என்று மண்டல சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

*****

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி, மாநகராட்சி ஆணையர் சங்கரன் அறிவுறுத்தலின் பேரில், வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலம் பழைய பேருந்து நிலையம் மற்றும் நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் கொரோனா நோயை தடுக்க சோப்பு கொண்டு கை கழுவும் செயல்முறையை இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் செய்து காண்பிக்கப்பட்டது. அருகில் உதவி ஆணையர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன்.



No comments

Thank you for your comments