Breaking News

உலகையே கதி கலங்க வைத்த விளம்பர காட்சி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் Emirates விமானச் சேவை நிறுவனம் அண்மையில் வெளியிட்ட விளம்பரம் ஒன்று பார்ப்பவரை கதி கலங்கவைத்துள்ளது.

அதில், சீருடையில் பெண் சிப்பந்தி நிற்கும் காட்சி இடம்பெற்றது. "Fly Better" என்ற வாசகம் கொண்ட அட்டையை அவர் காட்டிக்கொண்டிருந்தார்.


கேமரா தூரம் செல்லும்போது அந்தப் பெண் Burj Khalifa கட்டடத்தின் உச்சியில் நிற்பது தெரிகிறது.

உலகின் மிகப் பெரிய புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் உயரம், சுமார் 838 மீட்டர் (2,722 அடிகள்) ஆகும். அவ்வளவு உயரத்தில், அந்தப் பெண் எவ்வாறு நின்றார், அந்தக் காட்சி செயற்கையானதா - எனப் பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்துள்ள Emirates நிறுவனம், காட்சியில் தோன்றியது உண்மையில் சிப்பந்தி அல்லர், அவர் ஒரு வான் சாகசப் பயிற்றுவிப்பாளர், மற்ற அனைத்துமே உண்மை என்று கூறியுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட அந்தப் பெண்ணுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. அவருடைய பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அவர், கட்டடத்தின் உச்சியில் இருந்த கம்பத்துடனும், வேறு இரு பகுதிகளுடனும் கயிற்றால் இணைக்கப்பட்டிருந்தார். பாதுகாப்புக் கயிறுகள் அவருடைய சீருடைக்குள் மறைக்கப்பட்டிருந்தன.

சிப்பந்தியும், மற்றவர்களும் கட்டடத்தின் உச்சியை எட்ட1 மணி நேரத்துக்கு மேல் ஆனது. ஆளில்லா விமானம் (Drone) மூலம் ஒரே முறையில் அந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டது. 


No comments

Thank you for your comments