தயாநிதி மாறனுக்கு வாய்க்கட்டுப்பாடு வேண்டும்.... திமுக - பாஜக உச்சக்கட்ட மோதல்
சென்னை:
கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் சமீப காலத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டும் விவகாரம். இதுகுறித்து தயாநிதி மாறன் பேட்டிக்கு பதிலடி கொடுத்து வருகிறார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை... இந்த கோல்டு வார் தற்போது உச்சக்கட்ட மோதலாக வலுத்துள்ளது.
தமிழக அரசியல் களம் 2026 ஆம் ஆண்டு திமுக - அதிமுக என்ற நிலையிலிருந்து மாறி, திமுக - பாஜக என்ற நிலைக்கு மாறும் என பாரதிய ஜனதாவினர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்குடனேயே முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை பாஜக தமிழக மாநிலப் பிரிவின் தலைவராக நியமித்துள்ளது. பாஜகவின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து பம்பரமாக சுழன்று வருகிறார் அண்ணாமலை. திமுகவை டார்கெட் செய்தும் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார்.
கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் சமீப காலத்தில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டும் விவகாரம்.
இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி டிவிட்டர் பதிவில்,
மேகேதாட்டு அணை கட்டுவது உறுதி: பசவராஜ் பொம்மை.
தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது.
மேகேதாட்டு அணை கட்டுவது உறுதி: பசவராஜ் பொம்மை.
— Narayanan Thirupathy (@Narayanan3) August 1, 2021
தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது.
கர்நாடக அரசு, 'அணைக் கட்டியே தீருவோம்' என்கிறது. ஆனால் தமிழக பாஜகவோ, 'தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது' என்கிறது. கர்நாட மாநில பாஜக அரசை எதிர்த்துப் போராட உள்ளதாகவும் தமிழக பா.ஜ.க அறிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாஜக, கர்நாடக மாநிலத்தில் ஒரு நிலைப்பாடும், தமிழகத்தில் ஒரு நிலைப்பாடும் எடுத்துள்ளது.
இதைச் சுட்டிக்காட்டித்தான் தி.மு.க எம்.பி., தயாநிதி மாறன் சில நாட்களுக்கு முன்னர், 'தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் கூறிய நிலையில் மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம்' என்று கிண்டல் செய்தார்.
அண்ணாமலை டிவீட்
இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடிதான் தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது, 'கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது டி20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக் கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்... மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி.
தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார். இதை அவர் மாமா திரு.மு.க.ஸ்டாலின் அனுமதிப்பாரா?' என்று தயாநிதி மாறனுக்கு பதில் கேள்வி கேட்டார்.
இதற்கு தி.மு.க தரப்பிலிருந்தும் தயாநிதி மாறன் தரப்பிலிருந்தும் இதுவரை பதில் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் அண்ணாமலை, 'தயாநிதி மாறனுக்கு வாய்க்கட்டுப்பாடு வேண்டும். எங்களுடைய அரசியல் வேறு மாதிரி இருக்கும்' என்று இன்று(04.08.2021) எச்சரித்துள்ளார்.
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டும் விவகாரத்தில் பாஜக-திமுகவினருக்கு சமூக வலைதளத்தில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் பார்வைக்கு சமூக வலைதளப் பதிவுகள்...
தயாநிதி மாறனுக்கு வாய்க்கட்டுப்பாடு வேண்டும்.எங்களுடைய அரசியல் வேறு மாதிரி இருக்கும்!— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 4, 2021
#JUSTIN | தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் கூறிய நிலையில் மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் - திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேட்டி!#SunNews | #BJP | #Karnataka | #Annamalai | @Dayanidhi_Maran | @BJP4TamilNadu pic.twitter.com/gISvMCALuk
— Sun News (@sunnewstamil) July 31, 2021
மேகதாது அணை குறித்த தயாநிதி மாறன் அவர்கள் கருத்துக்கு, நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்கள் டுவிட்டரில் பதிலடி ..#KAnnamalai pic.twitter.com/S9jTPcAxAf
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 1, 2021
"தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா Thiru @mkstalin அனுமதிப்பாரா @Dayanidhi_Maran ?
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 1, 2021
- பாஜக மாநில தலைவர் @annamalai_k pic.twitter.com/YlJ2hgca1f
@BJP4TamilNadu தலைவர் @annamalai_k அவர்களை தரம் தாழ்ந்து ஒருமையில் விமர்சித்த @Dayanidhi_Maran அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முதலமைச்சர் @mkstalin வருத்தம் தெரிவித்து @Dayanidhi_Maran னை கண்டிப்பதே நாகரீக அரசியல்.
— Narayanan Thirupathy (@Narayanan3) August 1, 2021
தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதை அவர் மாமா Thiru @mkstalin அனுமதிப்பாரா?@BJP4TamilNadu
— K.Annamalai (@annamalai_k) July 31, 2021

No comments
Thank you for your comments