Breaking News

சர்ச்சையான ஒன்றியம் என்ற சொல்: திமுகவினருக்கு முன்னோடி இடதுசாரிகள்

சென்னை

ஒன்றியம் என்ற அந்த சொல்லை பயன்படுத்தக்கூடாது என்று அர்த்தமில்லை, கேரளத்தில் இடதுசாரிகள் தலைமையிலான அரசு, ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த வார்த்தையை பயன்படுத்தியதில் இடதுசாரிகள் தான் முன்னோடிகள்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச்செயலாளர் மு. வீரபாண்டியன், ஒன்றியம் எனும் சொல் என்று புத்தகமாகவே எழுதி, ஆகஸ்ட் 8 ம்தேதி வெளியாக இருக்கிறது.



ஒன்றியம் என்ற சொல்லை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போது கையாளத் தொடங்கினாரோ அப்போதிலிருந்தே அது சர்ச்சைக்குள்ளாக தொடங்கி விட்டது.

ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல. ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. தொடர்ந்து ஒன்றியம் என்றே பயன்படுத்துவோம் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் கூறியுள்ளார்.

இன்னொரு பக்கம் அந்த சொல்லாடல், தேசிய அரசியலையே உலுக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய ஒன்றியத்தை கம்யூனிஸ்ட் கட்சியினரும் உபயோகிக்க தொடங்கியுள்ளனர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச்செயலாளர் மு. வீரபாண்டியன், ஒன்றியம் எனும் சொல் என்று புத்தகமாகவே எழுதி, ஆகஸ்ட் 8 ம்தேதி வெளியாக இருக்கிறது.

இதுவரை ஒன்றியம் என்ற வார்த்தையை தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பயன்படுத்தவே இல்லையே என்று ஆசிரியர் மு. வீரபாண்டியனிடம் கேட்டபோது, 

ஒன்றியம் என்ற அந்த சொல்லை பயன்படுத்தக்கூடாது என்று அர்த்தமில்லை, கேரளத்தில் இடதுசாரிகள் தலைமையிலான அரசு, ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த வார்த்தையை பயன்படுத்தியதில் இடதுசாரிகள் தான் முன்னோடிகள். 

அண்ணல் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தில் ஒன்றியம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பண்டித நேரு தனது காலத்தில் மாநிலங்களின் விவகாரத்தில் எந்த தலையீடும் செலுத்தவில்லை.

மத்தியில் உள்ள அரசாங்கம் மாநிலங்களின் கூட்டாட்சியை அடிப்படையாக கொண்டது. மாநிலங்களுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதிகாரம் என்பது குறிப்பிட்ட இடத்தில் குவிந்து கொண்டே இருக்கக்கூடாது என்பதை வெளிப்படுத்தும் சொல்லே ஒன்றியம். 

ஆனால் இப்போது ஒன்றியத்தில் ஆள்பவர்கள், விவாதத்திற்கு இடம் கொடுக்காமல் ஓட்டெடுப்பு என்ற பெயரில் கைகளை தூக்கி சட்டங்களை நிறைவேற்றி விடுகிறார்கள்.

என்னை பொறுத்தவரை மாநிலங்களின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும். அதற்காக தேசிய கீதம் போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தமிழகத்தின் உணர்வு மட்டுமல்ல; அது மாநிலங்களின் உணர்வும் கூட.

என்னை பொறுத்தவரை மாநிலங்களின் தனித்தன்மையை பாதுகாக்க மாநிலங்களுக்கும் தனித்தனிக்கொடியை வடிவமைக்க உரிமை வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவே ஒன்றியம் என்ற சொல் எனும் புத்தகத்தை எழுதியுள்ளேன் என்றார் மு. வீரபாண்டியன்

No comments

Thank you for your comments