வேலூரில் சிறப்பாக செயலாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்று, கேடயம் வழங்கினார் ஆட்சியர்
வேலூர், ஆக.15-
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு ரூபாய் 1 கோடியே 44 இலட்சத்து 23 ஆயிரத்து 476 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று (15.08.2021) வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
✌ சிறப்பாகப் பணியாற்றிய அலுவலக மேலாளர் (பொது) பாலாஜிக்கு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் நற்சான்றினை வழங்கி பாராட்டினார்.
சுதந்திர போராட்ட தியாகிகளை அரசு சார்பில் கவுரவிக்கும் வகையில் சிறப்பு அலுவலர்களை நியமித்து அவரவர் வசிக்க கூடிய இல்லத்திற்கு சென்று அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட சரகத்திற்குட்பட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நற்சான்றுகள் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.
✌கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் காட்பாடி வட்டாட்சியரும், இந்நாள் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மைய கண்காணிப்பாளர் பாலமுருகனுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நற்சான்றினை வழங்கி பாராட்டினார்.
கொரோனா நோய்த்தொற்று காலத்தில் மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட பல்வேறு துறைச் சார்ந்த அரசு அலுவலர்கள் சிறப்பாக செயலாற்றியமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நற்சான்றுகள், கேடயங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
மேலும், பல்வேறு துறையின் வாயிலாக ரூபாய் 1 கோடியே 44 இலட்சத்து 23 ஆயிரத்து 476 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், சரக காவல்துறை துணைத்தலைவர் எ.ஜி.பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் க.இராமமூர்த்தி மற்றும் அரசு துறைச் சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து, வேலூர் சிஎம்சி அருகில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கும், வேலூர் மாவட்ட வடக்கு காவல் நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கார் திருவுருவ சிலைக்கும் மற்றும் வேலூர் அரசு முஸ்லீம் பள்ளி அருகில் உள்ள சத்தியமூர்த்தி திருவுருவ சிலைக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.




No comments
Thank you for your comments