Breaking News

சட்டசபையில் நிதிமைச்சர் பிடிஆர் பகிரங்க மன்னிப்பு

சென்னை :

தமிழக சட்டசபையில் எம்எல்ஏக்கள் இடையே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பகிரங்க மன்னிப்பு கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,

தமிழக சட்டசபையில் கடந்த 14 ம்தேதி, 2020-21 ஆம் ஆண்டு  திருத்திய பட்ஜெட் வெளியிடப்பட்டது, இதைத்தொடர்ந்து மறுநாளான 13 ம்தேதி வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டது, முதன் முதலாக  டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்ட இரு பட்ஜெட்டுகள் குறித்த விவாதம் இன்று இரண்டாவது நாளாக சட்டசபையில் நடைபெற்றது.


இவ்விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சம்பத்குமார், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மீது குற்றம்சாட்டி பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு  அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற காரசார விவாதத்தில்  நிதியமைச்சர்  பேசிய வார்த்தைகளையும்  சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்,

இதற்கிடையே எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ் பேசியபோது, 

நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் அமெரிக்காவில் படித்தவர், பொருளாதாரம் அறிந்தவர், ஆனால் தமிழ்நாட்டு மக்களை பற்றி அறியாதவர் என்றார், இதற்கிடையே அதிமுக உறுப்பினர் சம்பத் குமார் பற்றி அவர் குறிப்பிட்ட சில வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. இந்த நிலையில்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் 

நான் பேசிய கருத்துக்கள் மனவேதனை ஏற்படுத்தியிருந்தால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றும் என்னுடைய வார்த்தைகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார், நிதிமைச்சரே மன்னிப்பு கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments

Thank you for your comments