Breaking News

75வது சுதந்திர தினத்தை குறிக்கும் வைர விழா நினைவுத்தூண் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறப்பு

திறப்பு விழாவை காண வீடியோ கிளிக் செய்யவும்...




சென்னை:

இந்திய நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் சென்னை நேப்பியர் பாலம் அருகில், சுவாமி சிவானந்தா சாலை, காமராஜர் சாலை சந்திப்பில் தமிழ்நாடு அரசால் சுதந்திர தின வைர விழா நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. நினைவு தூணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.94 கோடி செலவில் வைர விழா நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது.

சுதந்திர தினவிழா  முழு வீடியோ தொகுப்பு  காணுங்கள்

சென்னை தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, முதல் முறையாக தேசியக் கொடியேற்றிய பின்னர், சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு வந்தார்.


பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முதலமைச்சருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி வரவேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 75-வது ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூணை திறந்து வைத்தார்.

கடற்கரை சாலையில் கம்பீரமாக கட்டப்பட்டுள்ள சுதந்திர தின நினைவுத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததும் மங்கள இசை இசைக்கப்பட்டது. அனைவரும் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.


இந்த நிகழ்வின்போது முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன்,  சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள 75-வது சுதந்திர தின வைர விழா நினைவுத் தூண் பாரீசில் உள்ள ஈபிள் டவர் போன்று வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.

வைர விழா நினைவுத்தூண் தரையில் இருந்து 59 அடி உயரத்துடன் கட்டப்பட்டுள்ளது. பீடத்தில் இருந்து மட்டும் 42 அடி உயரத்துடன் அமைந்துள்ளது.

நினைவுத்தூணின் உச்சியில் 4 சிங்கம் முகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது அசோக சக்கரம் நிறுவப்பட்டுள்ளது. நினைவுத்தூணை சுற்றி 4 புறமும் 4 வீரர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தின வைர விழா நினைவுத்தூண் பகுதியில் சிறிய பூங்கா அமைக்கப்படுகிறது. கடற்கரைக்கு வருபவர்கள் இந்த நினைவுத் தூணை பார்த்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments

Thank you for your comments