Breaking News

தாலிபான்களுக்கு ஆதரவு தர ரெடி! அதிரடியாக அறிவித்த 2 நாடுகள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையிலான அரசுட நட்புரீதியிலான உறவை மேம்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.



ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரிக்க துவங்கியது.இதன் காரணமாக, பல முக்கிய நகரங்களை அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறி, வேறொரு நாட்டிற்கு சென்றுவிட்டார்.

காபூலையும் கைப்பற்றிய தலிபான்கள், ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தையும் தன்வசப்படுத்தினர். ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகை உள்பட அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய தலிபான்கள் போர் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்தன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

முன்னதாக, தலிபான் தலைமையிலான அரசை பாகிஸ்தான் ஆதரித்த நிலையில், தற்போது சீனாவும் ஆதரவளித்துள்ளது. மேலும், தலிபான்களின் நடவடிக்கைகளை பொறுத்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments