அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம்- அமைச்சர் செந்தில்பாலாஜி
சென்னை:
கடந்த காலம்போல் இல்லாமல், வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பு உள்ளதற்கும் வித்தியாசம் மட்டும் 2.38 லட்சம் டன்.
நிலக்கரி காணாமல்போன விவகாரத்தில் தவறு யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அனல்மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும். இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை.
குறைபாடுகள் உள்ள 8,900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலம்போல் இல்லாமல், வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments
Thank you for your comments