Breaking News

120 பக்கங்கள் வெள்ளை அறிக்கை வெளியீடு - ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை ... நிதியமைச்சர் பி.டி.ஆர் பேட்டி




நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முழு  பேட்டி வீடியோ


சென்னை:

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்தும், கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று (09.08.2021) வெளியிட்டார். தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, 

அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி  வெள்ளை அறிக்கை வெளியிட்டப்படுகிறது. 


துறை செயலாளர்கள் வெள்ளை அறிக்கை தயாரிப்புக்கு பெரிதும் உதவினார்கள்.   ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களின் வெள்ளை அறிக்கைகளை ஆய்வு செய்தேன்.  

கடந்த 2001ம் ஆண்டு அதிமுக அமைச்சர் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையையும் ஆய்வு செய்தோம்.


மற்ற வெள்ளை அறிக்கைகளை விட கூடுதல் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.  தமிழகத்தின் கடன் நிலை, வருவாயில் ஏற்பட்டுள்ள மாற்றம், செலவினத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த விவரங்கள் உள்ளன.

இந்த வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் நான்தான் பொறுப்பு.  இணையதளத்தில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

இந்த வெள்ளை அறிக்கை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட நிதிப் பின்னடைவுகள் குறித்து வெளிப்படையாக அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில், முந்தைய அரசின் தவறான அணுகுமுறைகளினால் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு வருவாய் சரிவு ஏற்படவில்லை.

வருவாய் பற்றாக்குறை - அதிகரித்த கடன் சுமை  

2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. 

2016-ல் அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 

2021-ல அ.தி.மு.க அரசன் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4-ல் ஒரு மடங்கு குறைந்துவிட்டது. 

2020-2021-ல் மட்டும் தமிழ்நாடு அரசின் வருவாய் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு பொருளாதாரம் பலவீனமாக இருந்த நிலையில், கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மிகவும் மோசமாகியுள்ளது. அதேவேளையில், அ.தி.மு.க ஆட்சியில், தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த கணக்கு சரிவர பராமரிக்கப்படவில்லை.

வருவாய் பற்றாக்குறை இருந்ததால், நிதிப் பற்றாக்குறை பலமடங்கு உயர்ந்துவிட்டது. இதனால், தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் போது நிதிப் பற்றாக்குறை 4.85 லட்சம் கோடி என கூறப்பட்டது.

சுமார் ரூ.39 ஆயிரம் கோடி.  மறைமுக கடன்

கடந்த 5 வருடங்களில் தமிழக அரசின் மறைமுக கடன் சுமார் ரூ.39 ஆயிரம் கோடி. 

ரூ.39 ஆயிரம் கோடி அளவிற்கு மறைமுக கடன் வாங்கப்பட்டது குறித்து சரியான விளக்கங்கள் இல்லை

இடைக்கால நிதி நிலை மொத்த கடன் ரூ.5.70 லட்சம் கோடி

நடப்பு நிதி ஆண்டின் இடைக்கால நிதி நிலை மதிப்பீடுகளின் படி தமிழகத்தின் மொத்த கடன் - ரூ.5.70 லட்சம் கோடி

தமிழக அரசுக்கு தற்போது 92ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதிப்பற்றாக்குறை உள்ளது.

 மாநிலத்தில் வளர்ச்சி சரிவு

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; மாநிலத்தின் வளர்ச்சி 11.46% லிருந்து 4.4% ஆக சரிந்துவிட்டது.

போக்குவரத்து துறையில் நஷ்டம்

அரசு பேருந்து 1 கிலோமீட்டர் ஓடினால் அரசுக்கு 59 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது; மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் கொண்டு வருவதற்கு முன்பே போக்குவரத்து துறையில் நஷ்டம் உள்ளது!

வாகனங்கள் மீதான வரி

வாகனங்கள் மீதான வரி கடந்த 15 வருடங்களாக மாற்றப்படாமல் உள்ளது. 15 வருடங்களாக மோட்டார் வாகனங்கள் மீதான வரி சீரமைக்கப்படாததால் தமிழக அரசுக்கு நஷ்டம். பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மோட்டார் வாகனங்கள் மீதான வரி குறைவாகவே உள்ளது.

தகுதியற்ற நபர்களுக்கு அரசு மானியம்

தமிழக அரசின் செலவீனத்தில் அதிக தொகை மானியங்களுக்கே செல்கின்றது. மேலும்,  மானியங்கள் பெறுபவர்கள் குறித்த தகவல்கள் முறையாக இல்லை.   தகுதியற்ற நபர்களுக்கு தமிழக அரசின் மானியங்கள் செல்வது உண்மை தான் .


ஜிஎஸ்டி நிலுவைத் தொகை

தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடி அளவிற்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தர வேண்டியுள்ளது

மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் வரி வருவாயும் 33 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது 

உள்ளாட்சி அமைப்புகள்  சீர்கேடு

உள்ளாட்சி அமைப்புகள் கடந்த பல வருடங்களாக சொத்து வரியை மாற்றி அமைக்கவே இல்லை. உள்ளாட்சி அமைப்புகளில் நிர்வாக சீர்கேடு காரணமாக தமிழக அரசுக்கு அதிக இழப்பு

அரசு தினசரி செலுத்தும் வட்டி ரூ.87.3 கோடி

வாங்கிய கடன்களுக்கு தமிழக அரசு தினசரி செலுத்தும் வட்டி ரூ.87.31 கோடியாக உள்ளது. 

கடன் சுமை

மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரத்துறைக்கு ரூ.1200 கோடி நிலுவைக் கட்டணம் வைத்துள்ளன

மின்துறையும், போக்குவரத்து துறையும் மட்டும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையுடன் உள்ளன.

அதிமுக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் கடன் வாங்கியுள்ளது.

பூஜ்ஜிய வரி (Zero tax) என்பது அர்தமற்ற ஒன்று, சரியான வரி, சரியான விஷயங்களுக்கு மக்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்பன போன்ற முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.63 லட்சம் கடன் சுமை

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முழு  பேட்டி வீடியோ தொகுப்பை காண கீழே உள்ள யூடியூப் வீடியோவை பார்க்கவும் 




தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையின் முழு நகலையும் பார்வையிட கீழே உள்ள லிங்கில் சொடுக்கவும்.

Click 👉 தமிழ்நாடு நிதிநிலை வெள்ளை அறிக்கை





No comments

Thank you for your comments