கத்திரிக்காய் கிரேவி - Brinjal curry recipe.... Easy And Fast Cooking
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி - சிறு துண்டு
கரம் மசலா தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயம், இஞ்சி ஒன்றாக அரைக்கவும்...
தக்காளி தனியாக அரைக்கவும்...
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்பு வெங்காயம், இஞ்சி அரைத்த கலவையை கொட்டி நன்கு வதக்கவும்... பின்பு தக்காளி அரைவையை கொட்டி வதக்கவும்... இத்துடன் 1 டீஸ்பூன் கரம் மசலா, 2 டீஸ்பூன் மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி வதக்கவும்...
நன்கு வதக்கியவுடன் கத்திரிக்காய் போட்டு கிளறி பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறு தீயீல் வேகவைக்கவும்... வீடியோவில் காட்டிய பதத்துக்கு வந்தவுடன் இறக்கி சுவைக்கலாம்...
No comments
Thank you for your comments