Breaking News

அரசு வழங்கிய பட்டாவிற்கு இடம் அளவீடு செய்து தரக்கோரி சார் ஆட்சியரிடம் ஊராட்சி மன்றதலைவர் மனு


திட்டக்குடி:

எழுமாத்தூர் கிராமத்தில் அரசு வழங்கிய  பட்டாவிற்கு இடம் அளவீடு செய்து தரக்கோரி சார் ஆட்சியரிடம் ஊராட்சி மன்றதலைவர் மனு அளித்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா கோடங்குடி ஊராட்சிக்குட்பட்ட எழுமாத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்  மக்கள் சுமார் 200 குடும்பங்கள் வசித்துவருகிறார்கள்.

இங்கு வசிக்கும் மக்கள் போதிய இடமின்றி ஒரே வீட்டில் 2 மற்றும் 3 குடும்பங்கள் நெருக்கடியான சூழலில்   வாழ்ந்துவருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களின் நலன்கருதி விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் மூலம் 05.03.1996ம் ஆண்டு  சர்வே எண் 33/5B,7,12,16,17,18,20 ஆகிய சர்வே எண்ணில் சுமார் 0.02 ஏக்கர் நிலத்தில் 40 இலவச  பட்டாக்கள் வழங்கப்பட்டது.

அந்நாலில் இருந்து இதுநாள் வரை பட்டா வழங்கப்ட்டவர்களுக்கு இடம் அளவுடு செய்துதராமல் உள்ளது. இதனால் அவர்கள்பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள் எனவே  அவர்களுக்கு உடனே அளவீடு செய்து தரவேண்டும் என்று கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசு இடங்களை அளவீடு செய்து வீட்டுமனை இல்லாத ஏழைமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டியும் சர்வே எண் 99ல்  48.5 செண்ட் காலி நத்தம் இடத்தினை ஆக்கிரமிப்பு செய்தவரிடமிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  மீட்டு தரவேண்டுமெனவும் 40/1B  இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர்.

கோடங்குடி மற்றும் எழுமாத்தூர் கிராமத்தில் உள்ள அரசு இடங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊராட்சி நலத்திட்ட பணிக்கு மீட்டுதரவேண்டுமெனவும்  ஏழை எளிய மக்களுக்கு இலவச பட்டா வழங்கவேண்டுமெனவும் வலியுறுத்தியும்  ஊராட்சிக்கு தேவையான குடிநீர், சாலை மற்றும் அடிப்படை தேவைகள் குறித்தும்  வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித்குமார் இடம்  ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வேலாயுதம் மனு அளித்தார்.

முன்னதாக சார் ஆட்சியருக்கு ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வேலாயுதம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

No comments

Thank you for your comments