கர்நாடகா அணை கட்டுவதை தமிழகஅரசு தடுத்து நிறுத்தும்- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
சென்னை:
மேகதாது அணை பிரச்சினை குறித்து கர்நாடக முதல்வர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
மேகதாது அணை பிரச்சினை குறித்து கர்நாடக முதல்வர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை சட்டத்திற்குட்பட்டு கர்நாடகா செயல்படுத்தும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களுக்கு அறிக்கை வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், மேகதாது பிரச்சினைக் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 4-ம் தேதி கர்நாடக முதலமைச்சருக்கு எழுதிய பதில் கடிதத்தில்,
‘‘தமிழ்நாடு விவசாயிகள் லட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெல் பயிர் செய்வதற்கு காவேரி நீரையே நம்பி இருக்கும் நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். அதை செயல்படுத்தக்கூடாது’’ என கடுமையாக வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்.
No comments
Thank you for your comments