தமிழகத்தில் மூடிக்கிடக்கும் தடுப்பூசி உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறக்க திமுக எம்பிக்கள் மக்களவையில் வலியுறுத்தல்
புதுடெல்லி, ஜூலை21-
சென்னை செங்கல்பட்டு அருகே கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் தடுப்பூசி உற்பத்தி நிலையத்தை திறந்து இயக்க அனுமதிக்க வேண்டும். அதேபோல ஊட்டியில் ஒரு தடுப்பூசி தொழிற்சாலை மூடி கிடைக்கிறது அதனையும் திறந்து இயக்க அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.
மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவு தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட வேண்டும் தமிழகத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி மருந்துகளை செலுத்த இயலும் தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி மருந்துகள் உடனடியாக வழங்க வேண்டும் என்று திருச்சி சிவா வலியுறுத்தினார். உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி திட்டம் முடக்கப்பட்டுள்ளது இந்த திட்டம் முடக்க படாமல் இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிசன் உற்பத்தி செய்வதற்கு உதவி இருக்க வாய்ப்பு உள்ளது என்று திருச்சி சிவா குறிப்பிட்டார்.
சீனாவில் கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தொற்று கொடுக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் கூடுதலான வைரஸ் நோயாளிகள் உள்ளனர் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை கூறினார்.
மாநிலங்கள் மட்டுமே கொரானோ வைரஸ் பேரவையை கட்டுப்படுத்த இயலாது. தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எல்லாம் நேரில் சென்று பிரதமர் தடுப்பூசி மருந்து உற்பத்தியை ஊக்குவித்தார் பிரதமரின் இந்த முன்மாதிரி நடவடிக்கை பாராட்டுக்குரியது.
வைரஸ் தடுப்பூசி மருந்து எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் தடுப்பூசி மருந்து வேறுவிதமான விலை நிர்ணயிக்கும் போக்கு கைவிடப்பட வேண்டும் கரோனா வைரஸ் தொற்றுக்கு யாரையும் குறை சொல்வதில் அர்த்தமில்லை அதற்கு உரிய நேரம் இதுவல்ல தமிழகத்தில் மூடிக்கிடக்கும் 2 தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து இயங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்திருக்கிறார் அந்த வேண்டுகோளை நானும் ஆதரிக்கிறேன் என்று தம்பிதுரை கூறினார் அரசு என்ற வகையில் மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்க வேண்டியது அவசியம் வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம் நம்முடைய மக்களுக்கு இன்னும் முக கவசத்தை முறையாக எப்படி அணிய வேண்டும் என்பது தெரியவில்லை என்று தம்பிதுரை குறிப்பிட்டார்.
கேரள மாநில மார்க்சிஸ்ட் உறுப்பினர் எலாமரம் கரீம். முதல் ரக வைரஸ் தொற்று வந்தபிறகு போதுமான திட்டமிடல் பணியினை அரசு மேற்கொள்ளவில்லை அதனால்தான் இரண்டாவது பேரலையின் போது இழப்புகள் ஏற்பட்டன உள்கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் இந்த இழப்புகள் ஏற்பட்டன உள்கட்டமைப்பு வசதிகளை நாம் ஏற்படுத்தி இருந்தால் இந்த இழப்புகளை தவிர்த்து இருக்கலாம் என்று க்ரீம் கூறினார்.
இந்தியாவில் தடுப்பூசி மருந்துகளுக்கு ஒருபோதும் விலை கொடுத்து வாங்கிய நிலை இருந்ததில்லை அரசின் தவறான கொள்கைகள் காரணமாக உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியது ஆயிற்று தடுப்பூசிக்கு இரட்டை விலை நிர்ணயித்தால் அது பணக்காரர்களுக்கு தான் உதவியாக அமையும் என்று கூறினார்.
முதல் தொடரின்போது வேற்று மாநில தொழிலாளர்கள் இரவிலும் பகலிலும் நடந்து செல்லும் காட்சிகள் நம் கண்ணையும் நிறைத்தன இரண்டாவது தொற்றின்போது தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவமனையில் இடம் தேடி மக்கள் அறிந்த காட்சிகள் நம் கண்களை வருத்தின. பல மாநிலங்களில் அன்புக்குரியவர்களை புதைக்க அல்லது தகனம் செய்ய இடம்தேடி மக்கள் அலைந்தகாட்சிகள் ஏராளமாக அனைவரையும் வருத்தின.
சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ராம்கோபால் யாதவ் பேசும்பொழுது, சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழு நாட்டின் ஒட்டு மொத்த ஆண்டு வருமானத்தில் 2.5 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது அதனை நாம் செய்து இருந்தால் நமது மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைத்து இருக்கும் ஆனால் நாம் செய்யத் தவறிவிட்டோம் நம் நாடு ஏழை நாடு நீங்கள் தனியார் மருத்துவமனைகள் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் போல கட்டணம் வசூலிக்கின்றன உத்தரப்பிரதேசத்தில் நிலைமை மிகவும் மோசம் என்று குறிப்பிட்டார்.
1947 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவை ஆண்ட அரசர்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்து விட்டன என்பதை காட்டுகின்றது இந்த கரோனா வைரஸ் தொற்று பேரலை. மருத்துவ வசதிகள் மக்களின் உரிமையாகும் இந்த உரிமைகளை காக்க நாம் தவறிவிட்டோம் என்று ஆர்ஜேடி உறுப்பினர் எம் பி மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

No comments
Thank you for your comments