இந்தியா சார்பில் பளுதூக்குதலில் முதன்முறையாக வெள்ளி வென்ற மீராபாய் சானு
டோக்கியோ :
மீராபாய் சானு, பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். இந்தப் பிரிவில் அவருக்கும் சீனாவின் ஹாவு ஷிஹூயுக்கும் தங்கப் பதக்கம் வெல்வதில் போட்டி இருந்தது. சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கம் வென்றார். மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியாவின் கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.
இந்தியா சார்பில் பளுதூக்குதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுள்ளார் மீராபாய் சானு. 117 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்துக்குப் போட்டியிட்ட மீராபாய் சானுவால், அதில் வெற்றி பெற முடியவில்லை. இதன் காரணமாக அவருக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவேயாகும்.
49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கம் வென்றார். மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியாவின் கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.
இந்த வெற்றி குறித்து ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற விளையாட்டு வீரரான அபினவ் பிந்த்ரா, 'டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள். மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடிய இந்த சம்பவம் இன்னும் பல தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும்' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு பளுதூக்குதலில் கிடைக்கும் இரண்டாவது பதக்கம் ஆகும். இதற்கு முன்னர் கர்ணம் மல்லேஷ்வரி, இந்தியாவுக்காக கடந்த 2000 ஆம் ஆண்டு, 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். தற்போது தான் முதன் முறையாக இந்தியா சார்பில் ஒரு வீராங்கனை பளுதூக்குதலில் வெள்ளி வெல்கிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில், மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
Silver medal! 🥈
— Olympics (@Olympics) July 24, 2021
After a tough battle, Chanu Saikhom Mirabai finishes in second place in the #Weightlifting women's -49kg and earns the first medal for India at #Tokyo2020@iwfnet @WeAreTeamIndia pic.twitter.com/zLF5Et6NLC
இந்நிலையில், மீராபாய் சானுவை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். எதிர்காலத்தில் மேலும் பல பதக்கங்கள் வெல்வதற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
It's all over! 🏋️
— Olympics (@Olympics) July 24, 2021
Hou Zhihui wins the first #Weightlifting gold of #Tokyo2020 with a huge total score of 210 in the women's -49kg - setting three Olympic Records! 🥇@iwfnet pic.twitter.com/NJ4WSJAVqV
Windy Cantika Aisah completes the podium in the #Weightlifting women's -49kg with a total score of 194. Congratulations! 🏋️🥉@iwfnet @komiteolimpiade pic.twitter.com/QhKj8EaYOQ
— Olympics (@Olympics) July 24, 2021


No comments
Thank you for your comments