Breaking News

முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி... நே.ஜ.யூ.தலைவர் டாக்டர் குமார்

சென்னை, ஜூலை 29-

திமுக தேர்தல் அறிக்கையில், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் செய்தித்துறையினர் மீது  போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கருத்து சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் காக்கும் பொருட்டு செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். மாண்புமிகு முதலமைச்சருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் அவர்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். 

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பத்திரிகையாளர்களை காக்கும் பொருட்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்ளாக அறிவித்து பத்திரிகையாளர்களின் உழைப்பை அங்கீகரித்து பத்திரிகையாளர்க்கு பெருமை சேர்ந்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்... பத்திரிகையாளர்களின் வாழ்வாதார உதவியாக ரூ.5000 ஊக்கத் தொகை, கொரோனா நோய்த் தொற்றினால் இறப்பு ஏற்படின், இழப்பீட்டுத் தொகையை 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து ஜனநாயகத்தையும், பத்திரிகையாளர்களை காக்கும் பொருட்டு, திமுக தேர்தல் அறிக்கையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில்,  2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது போடப்பட்ட 90 வழக்குகளை திரும்ப பெறுவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்  எங்களையும் தன் குடும்பத்தில் ஒருவராக இணைத்து பெருமை சேர்த்த பத்திரிகை துறைக்கு உயிர் மூச்சாய் இருந்து, உயிர் நீர் ஊற்றியமைக்கு ஊடகவியலாளர்கள் சார்பில் கோடான கோடி நன்றியையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன். 

இவ்வாறு   நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments