கவர்ச்சி குயினாக மாறும் ரேஷ்மா பசுபுலேட்டி
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி முருங்கைக்காய் சிப்ஸ், சத்திய சோதனை, முணு முப்பத்தி மூணு ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சீரியல், படங்களில் நடித்து வந்த இவர், தனது ரசிகர்கள் வட்டத்தை பெருக்கவும், பட வாய்ப்புக்களுகாகவும் கவர்ச்சி குயினாக மாறி வருகிறார். இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் சமீபகாலமாக கவர்ச்சி எல்லை மீறி உள்ளது.
விமான பணிப்பெண்ணான ரேஷ்மா, சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதை விட்டு விட்டு சின்னத்திரையில் நுழைந்தார். நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக விளங்கி வருகிறார். இவர் முதன் முதலில் சன்தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார். இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும், இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் "புஷ்பா புருஷன் நீங்க தானே" என்ற டைலாக் செம வைரலானது. இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மேலும் பிரபலமானார்.
சாந்தனு, அதுல்யா ரவி நடித்து வரும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சத்தியசோதனை, முணு முப்பத்தி மூணு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேலம்மாள், பாக்கியலட்சுமி ஆகிய தொடர்களிலும் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடரிலும் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இணையத்தில் இளசுகளை கவர்ந்திழுக்க விதவிதமான புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர், ஜாக்கெட்டில் ஒத்த முடிச்சிப்போட்டு, பளிங்கு போல் இருக்கும் முதுகை காட்டி படு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப்பார்த்த இளசுகள், இது என்ன உடம்பா... வெடக்கோழி குழம்பா என்று கேட்டு இந்த புகைப்படத்தை பார்த்து பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.


No comments
Thank you for your comments