Breaking News

கடும் பதற்றம்.. போலிஸார் குவிப்பு... குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்...


கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வைத்தியநாத சாமி திருக்கோயிலுக்கு சொந்தமான குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அற நிலைத்துறை அதிகாரிகள் அதிகாலையிலேயே  ஆயுதம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வைத்தியநாத சாமி திருக்கோயிலுக்கு சொந்தமான குளத்தின் கரையோரம் 13 குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக அந்த இடத்தில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு அறநிலையத் துறை அதிகாரிகள் அப்பகுதியில் வசிக்கும்  மக்களை அப்புறப்படுத்த அமைக்கப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மக்கள் தாமாகவே முன்வந்து  கோயில் குளத்தில் கரையில் 7அடி ஆக்கிரமிப்புகளை  தானாகவே முன்வந்து எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில்  தற்போது அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று இரவு எட்டு மணிக்கு தீடீர் என வந்து காலை ஏழு மணிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஆக்கிப்புகளை அகற்றுவதில் போதிய கால அவகாசம் தராமல் அதிகாரிகள் அப்பகுதியில் வீடுகளை இடிப்பதில்  தீவிரம் காட்டுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இன்று காலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர்  குவிக்கபட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கி உள்ளது.  இதனால் பதற்றம் நிலவிவருகின்றது

No comments

Thank you for your comments