Breaking News

5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:

தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் 21ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் மத்திய மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பகுதிகள், மேற்கு கடல் பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 1 முதல் நேற்று வரையிலான காலகட்டத்தில், தமிழகத்திற்கு 78 சதவீதம் கூடுதலாக மழை கிடைத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,  பெரம்பலூரில் 370 சதவீதமும்,   திருச்சியில் 216 சதவீதமும்,   வேலூரில் 105 சதவீதமும் கூடுதலாக மழை கிடைத்திருக்கிறது. 

கன்னியாகுமரியில் 34 சதவீதமும், தென்காசியில் 23 சதவீதமும் குறைவாக மழை பெய்துள்ளது. 


No comments

Thank you for your comments