Breaking News

5 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை :

அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.


தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

கொரோனா 2-ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

கடந்த ஜூலை 9-ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 947 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. அதில் ராமநாதபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 136 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக கோவையில் 116 மற்றும் சென்னையில் 100 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 

குறைந்தபட்சமாக காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 1491 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது அவை குறைந்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments

Thank you for your comments