Breaking News

சிறுபான்மையினர் ரூ. 30 இலட்சம் வரை கடனுதவி பெற்று தொழில் முனைவோராக வாய்ப்பு

கடலூர்:

சிறுபான்மையினர் ரூ. 30 இலட்சம் வரைகடனுதவி பெற்று தொழில் முனைவோர் ஆகலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.


கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவர், இசுலாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், சமணமதத்தினர் (ஜெயின்) பார்சி போன்ற சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு ரூ.30 இலட்சம் வரை கடனுதவி பெற்று புதிதாக தொழில் துவங்கி தொழில் முனைவராகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடனுதவி பெறுவதற்கு வயதுவரம்பு 18 முதல் 60க்குள் இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் குறைந்த விகிதத்தில் கடனுதவி பெறுபவராயின் கிராமப்புறங்களுக்கு ரூ.98 ஆயிரமும், நகர்ப்புறங்களில் ரூ.1.20 இலட்சம் வரையிலும், அதிகபட்சம் கடனுதவி பெறுபவராயிருப்பின் ரூ.6.00 இலட்சம் வரை இருக்கலாம். குடும்பத்தில் ஒருவர்மட்டுமே கடனுதவி பெறமுடியும்.

தனிநபர்கடன்

தனிநபர்கடன் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் துவங்குதல், ஏற்கனவே செய்த தொழிலை அபிவிருத்தி செய்தல், பாரம்பரியக் கைவினை பொருட்கள் செய்தல் போன்றவைகள் மேற்கொள்ளலாம். உச்சபட்சமாக ரூ.30 இலட்சம் வரைகடனுதவி வழங்கப்படுகிறது. இவற்றில் வட்டி விகிதம் பெண்களுக்கு 6 சதவிகிதத்திலும், ஆண்களுக்கு 8 சதவிகிதத்தில் கடனுதவி பெறலாம். திட்டஅறிக்கை தவறாது சமர்ப்பிக்கப்படவேண்டும்.

சிறுவணிகக் கடன்

சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு சிறுவணிகம் கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 இலட்சம் வீதம் 7 சதவிகித வட்டி விகிதத்திலும், அதிகபட்சமாக ரூ.1.5 இலட்சம் கடன் கோருபவர்களுக்கு மகளிருக்கு 8 சதவிகித்ததிலும் ஆண்களுக்கு 10 சதவிகிதத்திலும் வழங்கப்படும். சிறுபான்மையினர் சுய உதவிக்குழுவில் 40 சதவிகிதநபர்கள் இதரபிரிவினராகவும் இருக்கலாம்.

கல்விக் கடன்

சிறுபான்மையினர் இளைஞர்களுக்கு இந்தியாவில் தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளில் பயில்பவராயின் ஆண்டொன்றிற்கு உச்சபட்சமாக ரூ.4 இலட்சம் வீதமும், வெளிநாடுகளில் பயில்பவராயின் ரூ.6 இலட்சம் வீதம் 3% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 இலட்சத்திற்கு மேல் ரூ.6இலட்சம் வரை இருப்பின் வட்டி விகிதம் பெண்களுக்கு 6% ஆண்களுக்கு 8% விகித்திலும் வழங்கபடும். இக்கடன் திட்டத்தில் சேர்க்கைக் கட்டணம், பயிற்றுவிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம், எழுதுபொருட்கள் கட்டணம், விடுதியில் தங்குபவராயிருப்பின் உண்டி உறையுள் கட்டணம் அடங்கும்.

கல்விக் கடன் புதுப்பித்தல் வேண்டியிருப்பின் கட்டாயம் முந்தையபருவத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருத்தல் வேண்டும்.

மேற்படி கடனுதவி திட்டங்களின் மூலம் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கோரப்படும் இனங்களில் வங்கியால் கோரப்படும் வங்கிக் கடனை திருப்பி செலுத்த வங்கி கோரும் ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பித்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மேற்படி வங்கி மற்றும் கிளை அலுவலகங்களிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவம்

விண்ணப்பப் படிவம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும் கட்டணமின்றி பெறலாம். அல்லது கடலூர் மாவட்டஆட்சியர் அவர்களின் இணையதளத்தில் https://cuddalore.nic.in/bc_mbc_minorities-welfare/  என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பபிக்கவேண்டியது

மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்டதிட்டத்தின் கீழ் தகுதியுள்ளநபர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டது.

அதிகாரப் பூர்வ இணையதளம் 

No comments

Thank you for your comments