Breaking News

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை மாதம் தொடங்கும்- மத்திய அமைச்சர்

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கும். அதேபோல் தற்போதும் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாடாளுமன்றம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்து வருகிறோம். ஜூலையில் அனைத்து எம்.பி.க்களும், ஸ்டாஃப்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாதம் தொடங்கும். தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதால், கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கும். அதேபோல் தற்போதும் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாடாளுமன்றம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்து வருகிறோம். ஜூலையில் அனைத்து எம்.பி.க்களும், ஸ்டாஃப்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்’’ என்றார்.

ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி நாடாளுமன்ற நிலைக்குழு உண்டு. அந்தந்த துறைக்கான முக்கிய முடிவுகள் குறித்து இந்த குழு விவாதிக்கும். இந்த குழுவை சமீப காலகமாக கூட்ட வேண்டும் (காணொலி) என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இரு அவை சபாநாயகர்களும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

No comments

Thank you for your comments