Breaking News

முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம்:

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் இன்று முதல் முறையாக சின்ன காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு வந்தார். 

அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் வீட்டில் உள்ள அவரது புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். 


மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி வழியெங்கிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அண்ணாவின் நினைவு இல்லம் அருகே கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கா.செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கா.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments