நாளை கூடுகிறது ஜிஎஸ்டி கவுன்சில் - நிதி அமைச்சர் அறிவிப்பு
புதுடெல்லி :
கோவிட் சிகிச்சை தொடர்பான பொருள்கள் மருந்துகள் கருவிகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக ஜூன் 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று புதுதில்லியில் 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
குழுவில் உறுப்பினர்களாக உள்ள சிலர் கோவிட்-19 சிகிச்சை பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநில நிதியமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா கோவிட்-19 சிகிச்சை பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் இறுதியில் கவுன்சில் எந்த முடிவு எடுத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அமல் செய்வோம் என்று கூறினார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு அவசியமா என்று அமைச்சர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பொருள்கள் பட்டியல்:
மருத்துவ தரம் உள்ள ஆக்சிசன், பல்சி ஆக்ஸி மீட்டர், கைகளை தன் தூய்மைப் படுத்த உதவும் சானிடைசர்,
ஆக்சிசன் செலுத்துவதற்கு தேவைப்படும் உபகரணங்கள்,
ஆக்சிசன் கான்சன்ட்ரேட்டர், ஆக்சிசன் வெண்டிலேட்டர்ஸ்.
பிபிஇகிட்ஸ், என் 95 மாஸ்க்,
அறுவைச் சிகிச்சையின்போது மருத்துவர்கள் பயன்படுத்தும் முகக் கவசங்கள்,
உடலில் வெப்ப நிலையை பரிசோதிக்க உதவும் கருவிகள், கோவிட் -19 சிகிச்சை மருந்துகள். கோவிட்-19 சோதனை கருவிகள்.
கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகள்.
கருப்பு பூஞ்சை நோய்க்கான ஊசி மருந்து அம்போடெரிசினுக்கு ஏற்கனவே வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments