காதல் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் வளைகாப்பு நடத்திய காதல் கணவன்
தென்காசி, ஜூன் 26:
காதல் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் வளைகாப்பு நடத்தி நெகழ வைத்த காதல் கணவன்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் கருப்பசாமி(28). ஆலங்குளத்தில் ஒரு பிரபல ஜவுளி கடையில் பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் பணிபுரிந்து வந்தவர் மணல்காட்டானூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சாரா(21).
தாய் தந்தையர் இல்லாத சாரா தனது சகோதரி திவ்யா பராமரிப்பில் இருந்தார். இந்நிலையில் கருப்பசாமியும் சாராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
9 மாத கர்பினியான சாரா கடந்த வாரம் பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஏற்கனவே ஊரடங்கு போன்ற சூழ்நிலையால் வளைகாப்பு நடத்த முடியாத நிலையில் கருப்பசாமி தனது காதல் மனைவிக்கு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்டார். அதன்படி தனது ஆசையை செவிலியர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் ரவிச்சந்திரனிடம் தகவல் அளிக்கபட்டது. வளைகாப்பு நடத்த முதல்வர் அனுமதி அளித்தார். இதனையடுத்து மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், அருகில் உள்ள கர்ப்பிணி பெண்கள் உடன் இருந்தவர்கள் சேர்ந்து விமர்சையாக மருத்துவமனையில் வைத்து வளைகாப்பு நடத்தினர்.


No comments
Thank you for your comments