Breaking News

உடல்நிலை சரியில்லாத நிலையிலும் உழைக்கும் பிடிஓ...!

கடலூர்                                   

 மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன் தலைமையில் சமாதானக்கூட்டம் நடைபெறும்.   


கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள்  உள்ளன இந்த ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலகத்தின்  மூலம் செயல்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மங்களூர் ஒன்றிய மேற்கு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது என்ற புகாரின் அடிப்படையில் சமுதாய கிணறு வெட்டி அதன் மூலம் குடிநீர் வழங்க பல்வேறு ஊராட்சிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த சூழ்நிலையில் அடரி அடுத்த ரெட்டாக்குறிச்சி ஊராட்சியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொறியாளர்கள், களப்பணி மேற்பார்வையாளர்ள் ஆகியோரின் ஆய்வின் மூலம் இடத்தை தேர்வு செய்து சமுதாய கிணறு வெட்டும் பணி  நடைபெற்று வருகிறது.    


கிணறு வெட்டும்  பணி முடியும் உள்ள சூழ்நிலையில்    கீழ் ஒரத்தூர் ஊராட்சியை சார்ந்த ஒரு சிலர் நபர்களின் தேர்தல் முன்விரோத தூண்டுதலின்பேரில் கிணறு வெட்டும் பணியை தடுத்து வருகின்றனர். இதுகுறித்த  புகாரின் அடிப்படையில் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன் நேரில் சென்று  ஆய்வு மேற்கொண்டு, இருதரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி ரெட்டாக்குறிச்சி  மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் கூட பொதுமக்களுக்காக உழைத்துவரும் பிடிஓ சிவகுருநாதனை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

No comments

Thank you for your comments