Breaking News

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமின் மனு தள்ளுபடி..!-கைது ஆவாரா? எகிறும் எதிர்பார்ப்பு..!

 சென்னை:

நடிகை சாந்தினி அளித்த குற்றச்சாட்டின் பேரில் அடையாறு போலீசார் பதிவு செய்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.


நாடோடிகள் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருப்பவர் சாந்தினி.  இவர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றியதாகவும், கருகலைப்பு செய்ததாகவும் கூறி இருந்தார். இந்த குற்றச்சாட்டின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு மணிகண்டன்   உயர்நீதிமன்றத்தி  மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போது ஜூன் 9-ந்தேதி வரையில் மணிகண்டனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. நீதிபதி அப்துல்குத்தூஸ் விசாரித்தார். மணிகண்டனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் கைது ஆவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments