“ஒரே பூமி, ஒரே சுகாதாரம்” பிரதமர் மோடி ஜி 7 மாநாட்டில் வலியுறுத்தல்..!
![]() |
The Prime Minister, Shri Narendra Modi participates in the first Outreach Session of the G7 Summit, through video conferencing, in New Delhi on June 12, 2021 |
ஜி 7 மாநாட்டுக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உலக சுகாதார தேவைகளுக்கு எல்லா நாடுகளும் இணைந்து அனைவருக்கும் பொதுவான தீர்வு ஒன்றை கண்டறிய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
ஜி7 உச்சி மாநாட்டின் முதலாவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி 12.06.2021 அன்று கலந்துகொண்டார்.
‘சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைத்தல்- சுகாதாரம்’ என்ற தலைப்பிலான அமர்வு, கொரோனா பெருந்தொற்றிலிருந்து உலக நாடுகள் மீண்டு வருவதிலும், எதிர்கால பெருந்தொற்றுகளுக்கு எதிரான நிலைத்தன்மையை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியது.
கூட்டத்தின் போது, இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட கொவிட் தொற்று அலையின் போது ஜி7 மற்றும் இதர நாடுகள் அளித்த ஆதரவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் 'முழுமையான சமூக’ அணுகுமுறையால், அரசு, தொழில்துறை மற்றும் பொது சமூகத்தின் அனைத்து நிலைகளின் நடவடிக்கைகளும் ஒன்றிணைக்கப்பட்டதாக அவர் எடுத்துக் கூறினார்.
தடம் அறிதல் மற்றும் தடுப்பூசியின் மேலாண்மையில் திறந்த ஆதார மின்னணுக் கருவிகளை இந்தியா வெற்றிகரமாகப் பயன்படுத்தியதைப் பற்றி பிரதமர் விரிவாக எடுத்துரைத்ததுடன், தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை இதர வளரும் நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சர்வதேச மருத்துவ ஆளுகையை மேம்படுத்தும் கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதாக பிரதமர் உறுதியளித்தார். கொவிட் சம்மந்தமான தொழில்நுட்பங்களுக்கு டிரிப்ஸ் விலக்கு அளிக்க வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மற்றும் தென் ஆப்பரிக்க நாடுகள் முன்வைத்த கோரிக்கைக்கு, ஜி7 நாடுகளின் ஆதரவை அவர் வேண்டினார்.
“ஒரே பூமி, ஒரே சுகாதாரம்”, என்ற கருத்தை இன்றைய கூட்டம் ஒட்டுமொத்த உலகிற்கும் வழங்க வேண்டும் என்று பிரதமர் திரு மோடி கூறினார். எதிர்கால பெருந்தொற்றுகளைத் தடுப்பதற்காக சர்வதேச ஒருமைப்பாடு, தலைமைத்துவம், ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த பிரதமர், இதுதொடர்பாக ஜனநாயக மற்றும் வெளிப்படைத் தன்மையிலான சமூகங்களின் சிறப்பு பொறுப்புணர்ச்சியையும் வலியுறுத்தினார்.
கொரானோ பெருந்தொற்றை தோற்கடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் இணைந்தும் ஆதரவாகவும் செயல்படவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தடுப்பூசி மருந்துகளுக்கு வடிவு காப்புரிமை மற்றும் அறிவுச் சொத்துரிமை தொடர்பான கட்டுப்பாடுகளில் இருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று உலக வர்த்தக நிறுவனத்தில் இந்தியாவும் தெற்கு ஆப்பிரிக்காவும் மனு செய்துள்ளனர் அந்த மனுவின் பேரில் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது இந்தியாவும் தெற்கு ஆப்பிரிக்காவும் முன்வைத்த திட்டத்துக்கு ஜி7 நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்..
இந்தியாவும் தெற்கு ஆப்பிரிக்காவும் முன்வைத்துள்ள திட்டத்துக்கு ஜி7 நாடுகள் மத்தியில் சிறப்பான ஆதரவு கிடைத்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஆத்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரானோ பெருந்தொற்று சமயத்தில் இந்தியா போன்ற நாடுகளில் கரத்தை வலுப்படுத்துவது அவசியம்.
கொரானோ பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் புதிதாக எந்த பெரும் தொற்றும் வரவிடாமல் தடுப்பதில் ஜி7 நாடுகள் உறுதியாக செயல் வேண்டும் என்றும் மோடி கூறினார் .
கொரோனா பெரும் தொற்று காரணமாக பிரிட்டனுக்கு செல்ல இருந்த பயணத்தை இந்தியப்பிரதமர் ரத்து செய்துவிட்டார் அதைத்தொடர்ந்து ஜி7 மாநாட்டில் விருந்தினர்களுக்கான பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கு கொள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்புவிடுத்தார். அந்த அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திரமோடி சனிக்கிழமை அன்று காணொளி மூலம் உரையாற்றினார்.
ஜி7 உச்சி மாநாட்டின் இறுதி நாளான இன்று இரண்டு அமர்வுகளில் பிரதமர் பங்கேற்பார்.
இந்தியா தவிர ஆஸ்திரேலியா தெற்கு கொரியா தெற்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் ஜி7 மாநாட்டுக்கு விருந்தினராக பங்கு கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது
No comments
Thank you for your comments