Breaking News

கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை

மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்தது. மாநில அரசுகளும் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மே 1-ந்தேதியில் இருந்து தடுப்பூசி வழங்க தயாராக இருந்தன. ஆனால் மத்திய அரசு போதுமான தடுப்பூசி டோஸ்களை ஒதுக்கவில்லை.

இதனால் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு இரண்டு டோஸ் செலுத்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு 10 லட்சம் பேருக்கு செலுத்த வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்குள் 20 லட்சம் டோஸ்கள் தேவை. தற்போது முதல் டோஸ் செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்கள் கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது தமிழக அரசும் அதே முடிவை எடுத்துள்ளது.

தமிழகத்திற்கு ஒதுக்கிய 13 லட்சம் டோஸ்கள் போதுமானதல்ல. ஆகவே தமிழக அரசு உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் கொரோனா தடுப்பூசிகளை பெற முடிவு செய்துள்ளது. உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டடு குறுகிய காலத்தில் இறக்குமதி செய்து அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments