தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவின் பேரில் செய்தியாளர்களுக்கு அங்கீகார அனுமதி சீட்டு வழங்கல்... SK சாமி நன்றி...
சென்னை :
நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பத்திரிக்கை/ ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் தலைவரும் மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான டாக்டர். எஸ் கே சுவாமி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குச் சாவடி மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையம் உள்ளிட்ட இடங்களில் செய்திகளை சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு போதிய வசதிகளை ஒரு சில மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிகள் செய்து தரவில்லை என்ற புகார் எழுந்தது அதைத்தொடர்ந்து விரிவான புகார் மனு ஒன்றை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். எஸ் கே சுவாமி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முன்வைத்தார். அதனடிப்படையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் புகார் குறித்து உடனே அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உயர்திரு. சத்திய பிரதா சாகு IAS உத்தரவு ஒன்றை கடந்த 16.04.2021 பிறப்பித்து இருந்தார்.
இதனை அடுத்து ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சென்று செய்திகளை சேகரிக்க நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தரப்படும் அங்கீகார அனுமதி சீட்டு ( Authority Letter) நேற்று தரப்பட்டது.
அரசிடமிருந்தும் மற்றும் அதிகாரிகளிடமிருந்தும் பத்திரிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊடக உரிமையை நிலைநாட்டுவதை தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் தனது லட்சியங்களில் ஒன்றாக கொண்டு செயல்பட்டு தன்னிகரற்ற சட்ட ஆலோசனைகள் மற்றும் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதை இந்த செய்தி வெளியீட்டின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் ஏதேனும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் 9445922210, 9968441440, 04429585944, 7550015555, 7550014444 என்று தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் தலைவரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான டாக்டர். எஸ் கே சுவாமி தெரிவித்துள்ளார்.


No comments
Thank you for your comments