Breaking News

நெல்லையில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

திருநெல்வேலி 

நெல்லை  மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன்  பெய்த கனமழை காரணமாக பாளையங்கோட்டையில்  பனை மரம் முறிந்து விழுந்து கார் சேதம் அடைந்தது.



நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து  தினமும் 100 டிகிரியைத்தாண்டி வெப்பநிலை இருந்து வந்தது. வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் பிற்பகலில் மழை பெய்து குளிர்ந்த நிலை காணப்பட்டது.  இந்நிலையில் இன்று மதியம் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நெல்லை மாநகர் பகுதிகளான பாளையங்கோட்டை மேலப்பாளையம் வண்ணார்பேட்டை, சந்திப்பு, கேடிசி நகர் , பெருமாள்புரம் ,  உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன்   கனமழை பெய்தது. மழையின் காரணமாக தண்ணீர் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியதுடன் பெருக்கெடுத்தும் ஓடியது.  

இந்தநிலையில்  பாளையங்கோட்டை  குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே சாலையோரம் நின்ற  பனை மரம் ஒன்று மழையுடன் வீசிய சூறைக்காற்று காரணமாக முறிந்து  சாலையில் நின்ற கார் மீது விழுந்ததில் கார்  சேதமடைந்தது. மேலும் மரம் முறிந்து விழுந்ததில் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலின்படி நிகழ்விடத்திற்கு வந்த  பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.  மேலும் சாலையில் மரம் முறிந்து விழுந்த காரணத்தினால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில்  மின்சாரம் தடைபட்டது

No comments

Thank you for your comments