தேர்தலில் பெரும் வன்முறை.. சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு ... 5பேர் பலி
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கூச் பிஹார் மாவட்டத்தில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. 2 இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து நாளை (11-4-2021) திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
பரதன் துளி பகுதியில் முதல் வன்முறை - ஒருவர் பலி
மேற்கு வங்காளம் பீகார் மாவட்ட சித்தால்குஷி சட்டமன்றத் தொகுதியில் பரதன் துளி பகுதியில் முதல் வன்முறை வெடித்தது. இங்கு திர்ணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களும் கலந்தனர். இதைத்தொடர்ந்து கலவரக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் இந்த துப்பாக்கி சூட்டில் ஆனந்த் வர்மன் என்பவர் உயிரிழந்தார்.
18 வயதாகும் ஆனந்து பார்மல் முதல்முறையாக வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி முன்பு வரிசையில் நின்று கொண்டிருந்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் ஆவார் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆனந்தபர்மன் கொல்லப்பட்டார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
இந்தச் செய்தியை பாரதிய ஜனதாக் கட்சியினர் முழுக்க முழுக்க மறுத்தனர். மேலும், கொல்லப்பட்ட ஆனந்த பர்மன் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் அவர் அங்குள்ள வாக்குச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரின் வாக்குப்பதிவு ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார் அவரை வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. ஆனந்த பர்மனின் குடும்பத்தினர் அவர் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர் என்று தெரிவித்தனர். ஆனந்து பர்மனின் மரணம் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவ காரணமாக அமைந்தது.
ஜோர்பட்கி இடத்தில் இரண்டவாது துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி
சித்தால் குஷி சட்டமன்ற சட்டமன்றத் தொகுதியில் ஜோர்பட்கி என்னும் இடத்தில் வாக்குச்சாவடி முன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கும் அப்பகுதியில் கூடிய உள்ளூர் மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் நேரடியாக, அந்த தொழில் பாதுகாப்பு படையினர் கையில் வைத்திருந்த துப்பாக்கிகளைப் பறிக்க வன்முறை கும்பல் முயற்சித்தது. அப்பொழுது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வன்முறைக் கும்பல் மீது நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள் அந்த இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆக ஆனந்த பர்மன் உள்பட மொத்தம் 5 பேர் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர கூச் பெஹார் பகுதிக்குக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி கண்டனம்
கூச் பிஹார் மாவட்டத்தில் சித்தால்குஷி இடம்பெற்ற வன்முறைகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் நடந்த மற்றொரு தேர்தல் பிரச்சாரப் பணியில் பேசும் பொழுது நேரடியாக குற்றம் சாட்டினார் அங்கு வன்முறையை தூண்டிய பொறுப்பு திர்ணாமுல் காங்கிரஸ் கட்சியை சேரும் வன்முறையை தூண்டி விட்டதில் நேரடிப் பங்கு வகிப்பவர் மம்தா பானர்ஜி என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜக மீது புகார் மனு
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று தேர்தல் ஆணையத்திற்கு சென்று பூச்சி பிஹார் மாவட்டத்தில் தங்கள் கட்சியின் வாக்குப்பதிவு ஏஜெண்டுகள் வாக்குச் சாவடிக்குள் நுழையவிடாமல் மத்திய பாதுகாப்பு படையினரும் பாரதிய ஜனதா கட்சியினரும் தடுப்பதாக புகார் கூறும் மனு ஒன்றினை தந்தனர்.
இரண்டு துப்பாக்கி சூடுகள் குறித்தும் ஆய்வு
வன்முறையைத் தடுக்கவே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு துப்பாக்கி சூடுகள் குறித்தும் ஆய்வு செய்து மாலை 5 மணிக்குள் சிறப்பு பார்வையாளர்களும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியின் அறிக்கை தரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் தந்த இடைக்கால அறிக்கை அடிப்படையில் வாக்குச்சாவடி எண் 126 உடனடியாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சிறப்பு பார்வையாளர்கள் மற்றும் மாநிலத் தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாளை கண்டன ஆர்ப்பாட்டம் - மம்தா பானர்ஜி
வாக்குச்சாவடிகள் முன் வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் மீது மத்திய பாதுகாப்பு படையினர் இன்று தங்கள் துப்பாக்கியை திருப்பி துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறார்கள் இந்த வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை (ஏப்ரல் 11) மேற்கு வங்காளம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார். நான்காவது கட்ட வாக்குப் பதிவின்போது நடந்த வன்முறைகளுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரினார்.
வாக்கு பதிவு நிலவரம்



No comments
Thank you for your comments