Breaking News

நடிகர் விவேக் மறைவு - நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இரங்கல்

சென்னை


நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை  நகைச்சுவைகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வி, மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் நடிகர் சின்ன கலைவாணர் விவேக். அவர்களின் மறைவு மனதை வாட்டி வதைக்கின்றன என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

பல்கலை வித்தகர், சின்ன கலைவானர் நடிகர் விவேக் அவர்களின் மறைவு மனதை வாட்டி வதைக்கின்றன. 

நகைச்சுவையால் எல்லோரையும் சிரிக்கவும் வைத்தும், சிந்திக்கவும் வைத்தவர், இன்று அவரது மறைவால் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி அழ வைத்துள்ளார். ஜாதி மதங்களை கடந்து அனைவரும் ஒன்று என முற்போக்கு சிந்தனைகளை கொண்டவர்... அனைவராலும் போற்றப்படுபவர்... நடிகர் என்பதை கடந்து சிறந்த சமூக ஆர்வலராக மூடநம்பிக்கைகளை களைய வேண்டும் என சமூக சிந்தனையுடன் அயராது உழைத்தவர்...

இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை   சின்னக் கலைவாணர் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமோடு நெருங்கி பழகிய நடிகர் விவேக். அப்துல் கலாம் ஐயாவின் சொல்படி 1 கோடி மரக்கன்றுகளை நட்டு வைக்கும் திட்டத்தில் மாணவர்களைத் திரட்டி ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை கிரீன் கலாம் என்ற தொடங்கப்பட்ட அமைப்பு மூலம் நட்டு விட்டார்.  அந்த வகையில் அப்துல் கலாமின் பிறந்த நாள்அன்று  சமூக வலைதளங்களில் #plantforkalam என்று ஒரு ஹேஷ் டாக் உருவாக்கினார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதை ட்ரெண்ட் ஆக்கும் படி மக்களுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார். அவரின் கோரிக்கைக்கு இணங்க மக்களும் அவரது ஹேஷ் டாக்கை ட்ரெண்ட் செய்தனர். சிலமணி நேரங்களிலேயே அது உலகளவில் ட்ரெண்ட் ஆனது. நடிகர் விவேக்கின் இந்த மரம் நடும் சேவையை பல பிரபலங்கள் ஆதரித்தனர்.

அவர் மறைந்தாலும், அவர் நட்டுவைத்து மரங்கள் அவரது சுவாச காற்றை வீசிக்கொண்டே இருக்கும்... அவர்  எண்ணங்களை நாம் உறுதி கொண்டு ஜாதி மதங்களை கடந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் இயற்கையை காக்க வேண்டும்.. மரங்களை நட வேண்டும்... 

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள், அனைவருக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு  நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருந்தார்.

No comments

Thank you for your comments