தமிழகத்தில் இருந்து கேரளா செல்ல இ-பாஸ் கட்டாயம்
சென்னை :
தமிழகத்தில் இருந்து கேரளா செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-பாசுடன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கேட்கப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலையின் தாக்கம் மிக அதிகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. டெல்லியிலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு கடுமையாக்கி உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து கேரளா செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-பாசுடன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான சான்றி தழும் கேட்கப்படுகிறது.
இ-பாஸ் நடைமுறை கார், மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கு மட்டுமின்றி நடந்து செல்வோருக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய நடைமுறையால் தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக கேரளா சென்றவர்களிடம் மாநில எல்லையான ஆரியங்காவில் இ-பாஸ் சரிபார்க்கப்பட்டது. மேலும் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ்களையும் கேட்டனர். அவைகள் இல்லாமல் சென்றவர்கள் அங்கேயே தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
No comments
Thank you for your comments