மன்சூர் அலிகான் மீது டி.ஜி.பி.யிடம் புகார்- மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னை
நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கின் உடல்நிலை பற்றி அளித்த பேட்டியில் கொரோனா தடுப்பூசி பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கின் உடல்நிலை பற்றி அளித்த பேட்டியில் கொரோனா தடுப்பூசி பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் மீது பா.ஜனதா சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அளித்த பேட்டியில், ‘நடிகர் விவேக் மரணத்துக்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய நடிகர் மன்சூர் அலிகான் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தடுப்பூசி பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments
Thank you for your comments