Breaking News

உடல் வெப்பநிலை 98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் முகவர்களுக்கு அனுமதியில்லை- சத்யபிரத சாகு திட்டவட்டம்



சென்னை:

முகவர்களுக்கு 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியில்லை. மேலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கா என்பது பற்றி தமிழக அரசே முடிவெடுக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.


வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும் தேர்தல் முகவர்கள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கா என்பது பற்றி தமிழக அரசே முடிவெடுக்கும்.


தேர்தல் வழிமுறைகளை பின்பற்றி மே 2ம் தேதி ஞாயிறன்று வாக்கு எண்ணிக்கை நடக்கும். 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணியில் 16,387 பேர் ஈடுபட உள்ளனர்.

தொகுதி, அதிகாரிகளை பொறுத்து வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கை மாறலாம்.

 கொரோனா நெகடிவ் சான்றிதழ், ஆர்டிபிசிஆர் சோதனை, தடுப்பூசி சான்று இருந்தாலும் முகவர்களின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதியில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments