Breaking News

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பு -அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி 8ம் தேதி ஆலோசனை

 புதுடெல்லி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.


இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஏப்ரல் 8ந்தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.   கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

No comments

Thank you for your comments