கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்திக்கொண்டார் மு.க.ஸ்டாலின்
சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை சென்னை காவேரி மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா தடுப்பூசி இதுவரை போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளவும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதையடுத்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன்.
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!
நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
No comments
Thank you for your comments