Breaking News

தமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தமிழக அரசு தடை ... அரசு அறிவிப்பு

சென்னை

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.



ஏப்ரல 10ம் தேதி முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா  வைரஸ்  நோய்த்  தொற்றை  தடுப்பதற்காக,  மத்திய  அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்  கீழ்,  ஊரடங்கு  உத்தரவு  பல்வேறு  தளர்வுகளுடன்  அமலில்  இருந்து வருகிறது.

தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின்  தாக்கம்,  அண்டை  மற்றும்  இதர  வெளிமாநிலங்களில்  அதிகரித்து வரும்     கொரோனா     வைரஸ்     பாதிப்பிற்குள்ளானவர்களின்     எண்ணிக்கை ஆகியவற்றைக்   கருத்தில்   கொண்டு,   கொரோனா   வைரஸ்   நோய்த்தொற்றை தடுப்பதற்காக,   தேசிய   பேரிடர்   மேலாண்மைச்   சட்டத்தின்   கீழ்,   தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை   நீட்டிப்பு   செய்யப்பட்டுள்ளது.   மேலும்,   நோய்த்   தொற்றின்   தன்மையை கருத்தில்  கொண்டு,   தமிழ்நாடு  முழுவதும்  நோய்  கட்டுப்பாட்டு  பகுதி  தவிர (நுஒஉநயீவ ஊடிவேயinஅநவே ஷ்டிநேள) மற்ற  பகுதிகளில்  ஏற்கனவே  அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்திஸ்கர்  மற்றும்  டெல்லி   உள்ளிட்ட  சில  மாநிலங்களில்,  கோவிட்  தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதேபோன்று தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில்        நிகழ்ச்சிகள்,        விழாக்கள்,        கூட்டங்கள்        போன்ற காரணங்களினாலும்     மற்றும்     பொது     இடங்களில்     மக்கள்     முகக்கவசம் அணிவதைத்     தவிர்ப்பதாலும்,     பணியிடங்களில்     நிலையான     வழிகாட்டு நெறிமுறைகளைப்      முறையாகப்   பின்பற்றத்   தவறுவதாலும்   சமீப   காலத்தில் கொரோனா    நோய்த்    தொற்று    அதிகரித்து    வருவதைக்    காணமுடிகிறது. குறிப்பாக  28.3.2021  அன்று,  13,070  நபர்கள்  கொரோனா  நோய்த்  தொற்றுக்கு சிகிச்சை  பெற்று  வந்த  நிலையில்,  07.04.2021  அன்று  கொரோனா  தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 27,743 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் கடந்த 5.4.2021 அன்று சுகாதாரத்துறை,   வருவாய்   மற்றும்   பேரிடர்   மேலாண்மைத்   துறை   உள்ளிட்ட முக்கியமான     துறையின்     உயர்     அலுவலர்களுடனும்,     மாவட்ட     ஆட்சித் தலைவர்களுடனும்  ஆய்வு  நடத்தி  உரிய  தடுப்பு  நடவடிக்கைகளை  உடனடியாக தீவிரப்படுத்தவும்,    RTPCR    சோதனைகளை    அதிகப்படுத்தவும்,    தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்தவும் அறிவுரைகள் வழங்கியதை அடுத்து தமிழக அரசும்,  மாவட்ட  நிர்வாகமும்  தொடர்  நடவடிக்கைகளை     எடுத்து  வருகிறது. இதன்   தொடர்ச்சியாக,   தற்பொழுது   நாளொன்றுக்கு   சுமார்   80,000   RTPCR பரிசோதனைகள்     செய்யப்படுவதோடு,     நோய்     பாதிக்கப்பட்ட     பகுதிகளில் கூடுதலாக  பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.  (Increased and  Aggressive Testing).

தமிழ்நாட்டில்    கொரோனா     நோய்த்     தொற்று    காரணமாக     நிலவும் சூழ்நிலையினை   கண்காணித்து   உரிய   நடவடிக்கைகள்   மேற்கொள்வதற்காக வருவாய்  மற்றும்  பேரிடர்  மேலாண்மைத்  துறை  கூடுதல்  தலைமைச்  செயலர் தலைமையில்,  நிதித்  துறை  கூடுதல்  தலைமைச்  செயலர்,  வருவாய்  நிருவாக ஆணையர்  மற்றும்  சுகாதாரத்  துறை  செயலர்  உள்ளிட்ட  உயர்  அலுவலர்களை உறுப்பினர்களாக  கொண்ட   குழு   ஒன்று   அரசால்  அமைக்கப்பட்டு,   நிலைமை தொடர்ந்து    கண்காணிக்கப்படுவதோடு,     நோய்த்    தடுப்பு     நடவடிக்கைகள் மேற்கொள்ள      தொடர்புடைய      துறை      அலுவலர்களுக்கு      அவ்வப்போது அறிவுரைகளும்   வழங்கப்பட்டு   வருகிறது.   கொரோனா   நோய்த்   தொற்றைக் கட்டுப்படுத்த   அரசு   முனைப்பான   பல்வேறு   நடவடிக்கைகளை   மேற்கொண்டு வந்தாலும்,   பொது   இடங்களில்   மக்கள்   முகக்கவசம்   அணியாமலும்,   சமூக இடைவெளியினை  கடைப்பிடிக்காததாலும்,  நாளுக்கு  நாள்  தொடர்ந்து  நோய்த் தொற்று அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும்,   பொது   மக்களின்   நலனையும்   கருத்தில்   கொண்டு,   நோய்த் தொற்றைக்       கட்டுப்படுத்த       ஏற்கனவே       அனுமதிக்கப்பட்டுள்ள       சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது.

1. எனவே  மறு  உத்தரவு  வரும்  வரை  கீழ்க்காணும்  செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது-

· மத்திய      உள்      துறை      அமைச்சகத்தால்      அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத்  தவிர,  சர்வதேச  விமான  போக்குவரத்திற்கான தடை  மத்திய  அரசால்  நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  இதற்கான  தடை தொடரும்.

· தமிழ்நாடு      முழுவதும்      நோய்க்      கட்டுப்பாட்டு      பகுதிகளில்      தற்போதுள்ள     நடைமுறைகளின்படி, எந்தவிதமான       தளர்வுகளுமின்றி       ஊரடங்கு       முழுமையாக கடைபிடிக்கப்படும்.

· நோய்  பரவலைக்  கருத்தில்  கொண்டு  திருவிழாக்கள்  மற்றும்  மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடை விதிக்கப்படுகிறது.

· 10.4.2021   முதல்   கோயம்பேடு   வணிக   வளாகத்தில்   செயல்படும் சில்லரை  வியாபார  காய்கனி  அங்காடிகள்  மட்டும்  செயல்பட  தடை விதிக்கப்படுகிறது.   அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

2. மேலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கீழ்க்கண்ட  செயல்பாடுகளுக்கு ஒரு சில  கட்டுப்பாடுகளுடன்  அனுமதி  அளிக்கப்படுகிறது.  இந்நடைமுறைகள் 10.4.2021 முதல் அமலுக்கு வரும்.

· நோய்     கட்டுப்பாட்டு     நடவடிக்கைகளை     தீவிரப்படுத்துவதற்கு அனைத்து    தரப்பு    மக்களும்    ஒத்துழைப்பு    நல்க    வேண்டும்.

தொழிற்சாலைகள்,  வணிக  வளாகங்கள்,  தனியார்  நிறுவனங்கள், அலுவலகங்கள்     மற்றும்     உணவு     விடுதிகளில்     பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை  பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான்  உபயோகப்படுத்துவதையும், முகக் கவசம்  அணிவதையும்  சம்மந்தப்பட்ட  நிறுவனங்கள்  உறுதி  செய்து, அனுமதிக்க      வேண்டும்.      முகக்      கவசங்கள்      அணியாமல் இருப்பவர்களை   கட்டாயமாக   அனுமதிக்கக்   கூடாது.   ஏற்கனவே வெளியிடப்பட்ட      நிலையான      வழிகாட்டு      நடைமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகளில்  பணிபுரியும்  பணியாளர்களுக்கு,  மத்திய  அரசு அவ்வப்போது     வழங்கும்     அறிவுரைகளுக்கு     ஏற்ப     தடுப்பூசி போடுவதற்கான  ஏற்பாடுகளை  தொழிற்சாலை  நிருவாகம்  செய்ய வேண்டும்.       மேலும்,   நிலையான   வழிகாட்டு   நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

· நிலையான   வழிகாட்டு   நடைமுறைகளை   கண்டிப்பாக   பின்பற்றி, மாவட்டங்களுக்கு   இடையேயான   அரசு   பொது  மற்றும்   தனியார் பேருந்து  மற்றும்  பெருநகர  சென்னையில்  இயக்கப்படும்  மாநகரப் பேருந்துகளில்  உள்ள  இருக்கைகளில்  மட்டும்  பயணிகள்  அமர்ந்து

பயணிக்க   அனுமதிக்கப்படும்.   பேருந்துகளில்   நின்று   கொண்டு பயணம்  செய்ய அனுமதி இல்லை.

· தற்போது  கொரோனா   நோய்த்   தொற்று   அதிகரித்து   வருவதைக் கருத்தில்    கொண்டு    நிலையான    வழிகாட்டு    நடைமுறைகளை கண்டிப்பாக   பின்பற்றி,   புதுச்சேரி,   ஆந்திரா   மற்றும்   கர்நாடகம் செல்லும்  பேருந்துகளில்  உள்ள  இருக்கைகளில்  மட்டும்  பயணிகள் அமர்ந்து    பயணிக்க    அனுமதிக்கப்படும்.    பேருந்துகளில்    நின்று கொண்டு பயணம்  செய்ய அனுமதி இல்லை.

· முகக்  கவசம்  அணிவது,  சமூக  இடைவெளியினை  கடைப்பிடிப்பது உள்ளிட்ட    நிலையான    வழிகாட்டு    நடைமுறைகளை    கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும்,  வணிக  வளாகங்கள்,  அனைத்து ஷோரூம்கள்  மற்றும்  பெரிய  கடைகள்  (நகை,  ஜவுளி)  

 ஒரு  நேரத்தில்  50  விழுக்காடு  வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11  மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

· நிலையான  வழிகாட்டு  நடைமுறைகளைப்  பின்பற்றி,  உணவகங்கள் மற்றும்  தேநீர்க்  கடைகளில்  உள்ள  மொத்த  இருக்கைகளில்,  50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11.00 மணி  வரை  அமர்ந்து  உணவு  அருந்த  அனுமதிக்கப்படும்.   மேலும்,

உணவகங்களில்    இரவு    11.00    மணி    வரை    பார்சல்    சேவை அனுமதிக்கப்படும்.

· கேளிக்கை    விடுதிகளில்      50   விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· பொழுதுபோக்கு  பூங்காக்கள்       பெரிய       அரங்குகள்,       உயிரியியல்       பூங்காக்கள், அருங்காட்சியகங்கள்  போன்ற  பொது  மக்கள்  கூடும்  இடங்கள்  50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

· நிலையான   வழிகாட்டு   நடைமுறைகளைப்   பின்பற்றி,   ஒன்றுக்கு மேற்பட்ட    திரையரங்குகள்    உள்ள    திரையரங்கு    வளாகங்கள் (அரடவiயீடநஒ),    வணிக    வளாகத்தில்        உள்ள திரையரங்குகள்     உட்பட     அனைத்து     திரையரங்குகளும்     50 விழுக்காடு    இருக்கைகளை    மட்டும்     பயன்படுத்தி    செயல்பட அனுமதிக்கப்படும்.

· நிலையான     வழிகாட்டு     நெறிமுறைகளைப்     பின்பற்றி,     உள் அரங்கங்களில்    மட்டும்    அதிகபட்சமாக    200    நபர்கள்    மட்டும் பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு,      கலாச்சார      நிகழ்வுகள்      மற்றும்      விழாக்கள் அனுமதிக்கப்படும்.

· நிலையான    வழிகாட்டு    நடைமுறைகளைப்    பின்பற்றி,    திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.

· விளையாட்டு  அரங்கங்கள்  மற்றும்  விளையாட்டு  மைதானங்களில், பார்வையாளர்கள்      அனுமதியின்றி      விளையாட்டு     போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.

· நீச்சல்     குளங்கள்     நிலையான    வழிகாட்டு    நடைமுறைகளைப் பின்பற்றி,  விளையாட்டு  பயிற்சிகளுக்கு    மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

· நிலையான  வழிகாட்டு  நடைமுறைகளைப்  பின்பற்றி,  பொருட்காட்சி அரங்கங்கள்  வர்த்தகர்களுக்கு  இடையேயான  செயல்பாடுகளுக்கு   மட்டும் அனுமதிக்கப்படும்.

· 31.8.2020    அன்று     அரசால்    வெளியிடப்பட்டுள்ள     நிலையான வழிகாட்டு   நடைமுறைகளை   கண்டிப்பாக   பின்பற்றி,   அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு இரவு 8.00 மணி வரை    அனுமதிக்கப்படும்.   இருப்பினும்,    அனைத்து   வழிபாட்டுத் தலங்களிலும்   திருவிழாக்கள்   மற்றும்   மதம்   சார்ந்த   கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

· நிலையான   வழிகாட்டு  நடைமுறைகளை   பின்பற்றி   சின்னத்திரை மற்றும்    திரைப்பட    தொழிலுக்கான    படப்பிடிப்புகள்    தொடர்ந்து அனுமதிக்கப்படும்.    இருப்பினும்,  படப்பிடிப்பில்  கலந்து  கொள்ளும் சின்னத்திரை   /   திரைபடக்   கலைஞர்கள்   மற்றும்   பணியாளர்கள் அனைவரும் சுகூஞஊசு கொரோனா பரிசோதனை செய்து கொண்டு/ தடுப்பூசி   போட்டு   கொண்டு   படப்பிடிப்பில்   கலந்து   கொள்வதை சின்னத்திரை  மற்றும்  திரைப்படப்  படப்பிடிப்பு  நிருவாகங்கள்  உறுதி செய்ய வேண்டும்.

· வாடகை  மற்றும்  டாக்ஸி  வாகனங்களில்  ஓட்டுநர்  தவிர்த்து  மூன்று பயணிகள்     மட்டும்     பயணிக்க     ஏற்கனவே     1.7.2020     முதல் அனுமதிக்கப்பட்டுள்ள  நிலையில்,  இந்தக்  கட்டுப்பாடு  கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

· ஆட்டோக்களில்   ஓட்டுநர்   தவிர்த்து   இரண்டு   பயணிகள்   மட்டும் பயணிக்க    ஏற்கனவே    1.7.2020    முதல்    அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

· வெளி  மாநிலங்கள்  மற்றும்  வெளிநாடுகளிலிருந்து   தமிழ்நாட்டிற்கு வரும்    நபர்களை    தொடர்ந்து   கண்காணிக்க    இ-பதிவு    முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பெருநகர    சென்னை    மாநகராட்சி    பகுதிகளில்    நோய்த்    தொற்றைக் குறைக்கும்   பொருட்டு,   மாநகராட்சியின்     ஒவ்வொரு   மண்டலத்திற்கும்,   கள அளவிலான   குழுக்கள்   அமைத்து   கண்காணிக்கப்படும்.       இதே   போன்று அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.

நோய்க்   கட்டுப்பாட்டு   பகுதிகளில்     வசிக்கும் மக்கள்,   இந்தப்  பகுதிகளிலிருந்து  வெளியில்  வராத  வகையில்,  காவல்  துறை, உள்ளாட்சி  அமைப்புகள் மற்றும்  சுகாதாரத்  துறை  ஊழியர்களைக்  கொண்டு  24 மணி     நேரமும்     தொடர்ந்து     கண்காணிக்கப்படும்.     இந்தப்     பகுதிகளில்

கிருமிநாசினிகள்    தெளித்தல்    உள்ளிட்ட    நோய்த்    தடுப்பு    நடவடிக்கைகள் தொடர்ந்து    மேற்கொள்ளப்படுவதோடு,    நோய்க்    கட்டுப்பாட்டு    பகுதிகளில் வசிக்கும்  மக்களுக்கு  அத்தியாவசியப்  பொருட்கள்  கிடைப்பதற்கு  உதவி  புரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவர்.

தமிழ்நாட்டில்   கொரோனா   பரவல்   குறைந்து   வரும்   சூழல்   நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், பொது மக்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்.   பொதுமக்கள்   வெளியே   செல்லும்போதும்,   பொது   இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும்    அடிக்கடி    சோப்பை    பயன்படுத்தி    கை    கழுவியும்,    சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத்   தவிர்த்தும்,   முழு   ஒத்துழைப்பு  நல்கினால்   தான்,  இந்த   நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.  பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே   வெளியிடப்பட்டுள்ள   நிலையான   வழிகாட்டு   நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.     காய்ச்சல்   முகாம்கள்   (குநஎநச  உயஅயீள)  தொடர்ந்து   நடத்திடவும், வீட்டிற்கு  வீடு  சென்று  காய்ச்சல்,  சளி,  இருமல்  உள்ளவர்களை  தினந்தோறும் கண்காணிக்கவும்,       நோய்த்       தொற்று       ஏற்பட்டவர்களது       தொடர்பில்

இருந்தவர்களை    கண்டறிந்து       அவர்களுக்கு    தகுந்த பரிசோதனைகள்   மேற்கொள்ளவும்   காவல்,   சுகாதாரம்,   வருவாய்,   உள்ளாட்சி அமைப்புகளின்  துறை  அலுவலர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.     அனைத்து மாவட்ட   ஆட்சியர்கள்   மற்றும்   பெருநகர   சென்னை   மாநகராட்சி   ஆணையர் இதனை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

அரசு    மருத்துவ    நிலையங்கள்    மற்றும்    அங்கீகரிக்கப்பட்ட    தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா  தடுப்பூசி  மையங்கள்  தொடர்ந்து  செயல்பட்டு வருகின்றன.  கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக  45  வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில்  இரண்டு  வாரத்திற்குள்ளாக  தடுப்பூசி  போட்டுக்  கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நோய்த்     தொற்று     அறிகுறி     இருந்தால்     தாமதமின்றி     உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இதனை கடைபிடித்து, கோவிட் நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்    அனைவரும்    முழு    ஒத்துழைப்பு    வழங்க    வேண்டும்    என்று பொதுமக்களை அரசு கேட்டுக்கொள்கிறது.

 இவ்வாறு, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


No comments

Thank you for your comments