அதிமுக-தேமுதிக இடையே தொகுதி பங்கீடு... ஒப்பந்தம் நாளை கையெழுத்து
சென்னை, மார்ச் 7:
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 17 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்குவதுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மூன்றுகட்டப் பேச்சுக்குப் பிறகும் தேமுதிகவுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
தேமுதிக 23 தொகுதிகள் கேட்பதாகவும், 17 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தர அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு நாளை கையொப்பமாகும் எனக் கூறப்படுகிறது.

No comments
Thank you for your comments