Breaking News

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை:   

6 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வேட்பாளர் பட்டியலை கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

கோவில்பட்டி- கே.சீனிவாசன்

திருப்பரங்குன்றம்-பொன்னுத்தாய்

திண்டுக்கல் - என்.பாண்டி

கந்தர்வக்கோட்டை-எம்சின்னதுரை

அரூர்.   -ஏ.குமார்

கீழ்வேளூர்- மகாலிங்கம்


6 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர்கள் கோவில்பட்டி- கே.சீனிவாசன் திருப்பரங்குன்றம்-பொன்னுத்தாய் திண்டுக்கல் - என்.பாண்டி கந்தர்வக்கோட்டை-எம்சின்னதுரை அரூர். -ஏ.குமார் கீழ்வேளூர்- மகாலிங்கம் அனைத்திலும் வெல்வோம்; அமோகமாக வெல்லுவோம்.
0:25
875 views

No comments

Thank you for your comments