கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி... கடன் நிலுவை விவரங்களை கோரியுள்ளது கூட்டுறவுத்துறை
சென்னை, மார்ச் 3-
கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை அடகுவைத்து பெற்ற நகைக்கடன் தள்ளுபடி என முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புக்கு பின், கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை கோரி அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில் 6 சவரன் வரை நகையை அடகு வைத்து பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 26ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார்.
முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்ட நாள் முதல் கூட்டுறவு வங்கிகளுக்கு தினமும் வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் நகை கடன் தள்ளுபடி குறித்து தெரிவிக்குமாறு வங்கி அதிகாரியிடம் கேட்டு வருகின்றனர். வங்கி அதிகாரிகளும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி வாடிக்கையாளர்களை அனுப்பி வைத்தனர். ஜனவரி 31ஆம் தேதி வரை கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் இருக்கும் நகை கடன்கள் எவ்வளவு என்று தெரிவிக்குமாறு அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். நிலுவையில் உள்ள நகைக்கடன் விவரங்களை தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மின்னஞ்சல் அனுப்பி வைக்குமாறு அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் பதிவாளர் சுப்பிரமணியன் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றிக்கை விவரம் கீழே தரப்பட்டுள்ளது.


No comments
Thank you for your comments