Breaking News

மு.க.ஸ்டாலின் அப்படியே காப்பியடித்துவிட்டார்.. கமல்ஹாசன் பொளேர்!

சென்னை, மார்ச் 8-

 மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் காப்பி அடித்துவிட்டார் என்று கமல்ஹாசன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

 திருச்சியில் 07.03.2021 அன்று  திமுக சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் இதில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 7 துறைகள் 7 உறுதிமொழிகள், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்குத் திட்டங்கள் போன்றவற்றை ஸ்டாலின் அறிவித்தார். 

ரேஷன் கார்ட் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த மாநாட்டில் 2 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் திமுக வெளியிட்ட இந்த அறிவிப்புகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். ஸ்டாலின் என்னுடைய திட்டத்தை காப்பி அடித்துவிட்டார். இல்லதரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று கூறியதை திமுக காப்பியடித்துவிட்டது.

ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல் பேசுகிறார். நாமே தீர்வு என்றால் அவர், ஒன்றிணைவோம் வா என்கிறார். தற்போது இல்லதரசிக்கு ஊக்க தொகை என்றால் அதையும் அவர் அறிவிக்கிறார். 7 உறுதிமொழி உட்பட திமுகவின் அனைத்து அறிவிப்பும் காப்பி அடிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகும்.

மக்கள் நீதி மய்யம் எழுதி வைக்கும் காகிதங்கள் பறந்து சென்று, துண்டு சீட்டாக மாறி திமுகவிடம் சேருகிறது. இதை படித்து ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிடுகிறார். எதுவும் அவர்களின் சொந்த திட்டம் இல்லை. 

அரசியலை விட்டு 30 வருடம் முன்பே விலகியிருந்தால் தமிழகம் தப்பித்து இருக்கும். இப்போது "அவர்"அரசியலை விட்டு விலகி இருக்கிறார். சமையகட்டிலிருந்து சதி செய்வது தான் உங்கள் அரசியலா? நீங்க அரசியலுக்கு வந்ததும், அரசியலை விட்டு விலகியதற்கும் ஒரே காரணம்தான் இருக்கிறது .. உங்களுக்கு பணம் சம்பாதிக்க ஆசை. எனக்கு அப்பாகிட்டயும் பயம் இல்ல, அம்மா கிட்ட பயம் இல்ல.

காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்தது உண்மை. இது எல்லோருக்கும் தெரியும். இதை வதந்தி என கூறுவது காங்கிரசின் நிலைப்பாடு. கயவரகள் அனைவர் பற்றியும் பேசுவது என் கடமை. இரண்டு கட்சிகளும் ஊழல் திலகங்கள். இவர்களை மொத்தமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டியது நமது கடமை என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது டிவிட்டர் பதிவில்,

எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்.

 இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tweet

Conversation

எங்கள் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பிரதியெடுத்துக் கொண்ட கழகம் எங்கள் நேர்மையையும், தூய்மையையும் கைக்கொண்டால் மகிழ்வேன்.
Translated from Tamil by
I would be happy if the corporation, which has copied all the highlights of our election manifesto, embraces our honesty and purity.


No comments

Thank you for your comments