குலதெய்வ கோவிலில் சசிகலா வழிபாடு
தஞ்சாவூர்:
தீவிர அரசியலில் ஈடுபட போவதாக முதலில் கூறிய சசிகலா திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அசியலில் இருந்து விலகுவாக அறிவித்தார். அரசியலில் இருந்து விலகி உள்ள சசிகலா தற்போது கோவில் வழிபாடு, ஆன்மீக பயணம் என்று சுற்ற தொடங்கி உள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கி இருந்தார். தீவிர அரசியலில் ஈடுபட போவதாக முதலில் கூறிய அவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அசியலில் இருந்து விலகுவாக அறிவித்தார்.
அதன்பின் வீட்டை விட்டு வெளியே வராமல் மொத்தமாக வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருந்த சசிகலா இப்போதுதான் வெளியே வர தொடங்கி உள்ளார். தஞ்சாவூருக்கு தனது ஆன்மீக பயணத்தை சசிகலா மேற்கொண்டு உள்ளார்.
நேற்று மாலை தி நகரில் உள்ள இளவரசி வீட்டில் இருந்து கிளம்பி ஆரவாரமில்லாமல் தஞ்சாவூருக்கு சசிகலா வந்தார். தஞ்சை அருளானந்த நகரில் உள்ள தனது கணவர் நடராசனின் வீட்டில் தங்கினார். இங்கு மறைந்த நடராசன் கட்டிய பெரிய வீடு இருக்கிறது. பங்களா போல இருக்கும் சொகுசு வீடாகும் இது. இங்குதான் சசிகலா அடுத்த சில நாட்களுக்கு தங்க போகிறார்.
இன்று அதிகாலையே தஞ்சையை அடுத்த விளார் கிராமத்தில் உள்ள அவரது குல தெய்வமான வீரனார் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். அவருடன் உறவினர்கள் ஏராளமானோர் இருந்தனர்.
உறவினர்கள் பலர் இருந்தாலும் கட்சிக்காரர்கள் யாரும் பெரிய அளவில் இல்லாமல், பெரிதாக ஆரவாரம் இன்றி சசிகலா இந்த வழிபாட்டை நடத்தினார். அதன்பின் மீண்டும் ஓய்வு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றவர் பின் வெளிய வரவில்லை. இன்னும் சில நாட்கள் சசிகலா தஞ்சையில் இருக்க போகிறார்.
இதையடுத்து அவர் நடராசனின் தம்பி பழனிவேலின் பேரக்குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்கிறார்.
வருகிற 20ம் தேதி நடராசனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினமாகும். அன்று விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே உள்ள நடராசனின் சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்துவார் என தெரிகிறது. இந்த பயணத்தின் நோக்கம். ஆனால் அதற்கு பின்னும் இவர் சில கோவில்களுக்கு செல்ல இருக்கிறாராம்....
நேற்றே இரவே சசிகலா இருந்த பங்களாவிற்கு சிலர் காரில் வந்து அவரை பார்த்துள்ளனர் என்ற தகவல் கசிந்துள்ளது. தேர்தல் நேரத்தில் சசிகலா தஞ்சைக்கு வந்தது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அவரை அரசியல் பிரமுகர்கள் சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
No comments
Thank you for your comments