Breaking News

தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூர் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கடலூர் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று மாநில செயற்க்குழு உறுப்பினர் நீதிராஜன் மனுதாக்கல் செய்துள்ளார். 



இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன்,  கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன், விசிக மேற்கு மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி, விருத்தாசலம் தொகுதி செயலாளர் ஐய்யாயிரம், மாநில துணைச்செயலாளர் நீதிவள்ளல், நகர்பெரியசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் சேகர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சோழன்சம்சுதீன், ஆகியோருடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன்  காமராஜர் அண்ணா  அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஊர்வலமாக வந்து தேர்தல் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களிடம்  வேட்பு மனு தாக்கல் செய்தார்.

விருத்தாசலம் செய்தியாளர் ஆர்.காமராஜ்

No comments

Thank you for your comments