Breaking News

என்ஜேயூவில் இணைந்தனர் காஞ்சிபுரம் செய்தியாளர்கள்!

காஞ்சிபுரம், மார்ச் 3 :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் போன்றவற்றில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனில் தங்களை இணைத்து கொண்டனர்.




வேலூரை  தலைமையிடமாக கொண்டு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் செயல்படுகிறது. இந்த யூனியன் பதிவு எண்:1595, தொழிற்சங்க விதியின் கீழ் அங்கீகாரம் பெற்று 1926ன் படி இயங்குகிறது. இந்த நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் பத்திரிகையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (03.03.2021) காஞ்சிபுரத்தில் நடந்தது. 


ஆலோசனை கூட்டத்தில் என்ஜேயூ தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கா.குமார் சிறப்புரையாற்றினார். இதில் பத்திரிகையாளர்கள் நலன் குறித்தும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும், செய்தியாளர்களின் பங்கு என்னவென்றும் விரிவாக விளக்கி கூறினார். 

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு  வடதமிழகம் தலைவர்  ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.



காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொலைக்காட்சி செய்தியாளரும், என்ஜேயூ மாவட்ட தலைவருமான ஜீவானந்தம் தலைமை வகித்தார்.  



மாலைமுரசு சத்யசீலன், ராஜ் தொலைக்காட்சி மணிகண்டன், விண் தொலைக்காட்சி தினேஷ், தினச்செய்தி புகைப்பட கலைஞர் மோசஸ், ஜெயா தொலைக்காட்சி ராஜசேகர், கேப்டன் தொலைக்காட்சி நவரேசன், மாலை தமிழகம் தியாகராஜன், நமது அம்மா புகைப்பட கலைஞர் கோவர்த்தனம், மெகா தொலைக்காட்சி உமாபதி, தந்தி தொலைக்காட்சி பத்மநாபன், கலைஞர் தொலைக்காட்சி ஜான்போஸ்கோ, தினபூமி ரமேஷ், நமது அம்மா  புகைப்பட கலைஞர் தரணிதரன், தினமணி ஐயப்பன், புதிய தலைமுறை தொலைக்காட்சி உதயகுமார், ஜெயா தொலைக்காட்சி இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 



கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தேநீர் விருந்து உபசரிப்பு அளிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சுதந்திரத்தை காத்திட உரிமைகளை பெற்றிட இணையாண்மையை வென்றெடுக்க ஒன்றுபடுவோம் என்று செய்தியாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.






















No comments

Thank you for your comments